dmk young cader mla raja

தமிழக எதிர்க்கட்சித் தலைவரை விமர்சித்த டிடிவி தினகரனை திமுக இளம் எம்.எல்.ஏ. ராஜா மிகக் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திமுக மீது விமர்சனங்களை முன்வைக்கும் அதிமுக வின் தற்போதைய தலைவர்களுக்கு ஸ்டாலின் நேரடியாக பதிலளிப்பதில்லை.... இளம் எம்.எல்.ஏ.க்களைக் கொண்டே அவர் பதிலடி அளித்து வருகிறார்.
அந்தவகையில், மு.க.ஸ்டாலினை டிடிவி தினகரன் விமர்சித்தற்கு திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா. பதிலடி அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு

அன்னியச் செலவாணி மோசடிப் பேர்வழிக்கு அறிக்கை விடுவதெல்லாம் ஒரு கேடா?" "கூவத்தூர்" மிரட்டல் மூலம் துணைப் பொதுச் செயலாளர் பதவியை அபகரித்துக் கொண்டிருக்கும் திரு டி.டி.வி தினகரனின் அறிக்கையை பார்த்ததும் எண்ணத் தோன்றுகிறது.

தங்கத்தைப் பார்த்து இழித்ததாம் பித்தளை" என்பது போல் திரு டி.டி.வி.தினகரன், அப்பழுக்கற்ற, அரசியல் நேர்மைக்கு இலக்கணமாகத் திகழும் ஸ்டாலினை பார்த்து விமர்சிப்பது விரக்தியின் விளிம்பில் நிற்பவரின் புலம்பல் போல் இருக்கிறது.


ஆகவே, எங்கள் ஸ்டாலினை வீணாக சீண்ட வேண்டாம் என்று டி.டி.வி. தினகரனை எச்சரிக்க விரும்புகிறேன். மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப "குற்றவாளி" பினாமியின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப ஸ்டாலின் தீர்மானித்து விட்டால் ஒரு நிமிடம் கூட "குற்றவாளி"கள் வழிகாட்டும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் தொடர முடியாது என்பதை மட்டும் நன்கு ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று டி.டி.வி. தினகரனை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ராஜா விமர்சித்துள்ளார்.