2021 தேர்தலில் எந்த ஒரு காரணத்திற்காகவும் திமுக பிஜேபி உடன் கூட்டணி செய்வதற்கான வாய்ப்புகள் ஒரு போதும் இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்கு  உட்பட்ட யானைகவுனி பேருந்து நிலையம் சாலை அருகே  சாலையோர பூங்கா அமைக்கும் பணியை  நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்வின் போது சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு உடன் இருந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன். எங்களுக்கு வாக்களித்த மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் சாலையில் இருந்த குப்பைகளை அகற்றி  சாலையோர பூங்கா அமைத்து தரும் பணியை செய்யஅடிக்கல்நாட்டப்பட்டுள்ளது.

 

இன்னும்  சில தினங்களில் அடுத்த மாதமே பணிகள் முடிக்கபட்டு திறப்பு விழா நடைபெறும் என்றும் கூறினார். மேலும் 
2021இல் பிஜேபி உடன் திமுக  கூட்டனி  வைக்கும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது தொடர்பான கேள்விக்கு  பதிலளித்த அவர், எந்த மனநிலையில் ஒரு மூத்த தலைவர் இதை சொன்னார் என்று தெரியவில்லை. எந்த ஒரு காரணத்திற்காகவும் திமுக பிஜேபி உடன் கூட்டனி செய்வதற்கான வாய்ப்புகள் ஒரு போதும் இல்லை என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவினர் கொரோனாவை  வைத்து தமிழகத்தில் நாடகம் ஆடி வருகிறார்கள். தகடு அடிப்பது முதல் நோய் தொற்றுக்கு பரிசோதனை உள்ளிட்ட அனைத்திலும் ஊழல் செய்வதில் தமிழகம் தான் முதலிடம்  வகிப்பதாகவும், மத்திய அரசு தொடர்ந்து தமிழ் மொழி போன்று மற்ற செம்மொழிகளையும் இந்தியாவில் புறக்கணித்து வருகிறது என்றார். இந்தியை வளர்க்கலாம் அதற்காக அதை மக்கள் மீது திணிக்க கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்..