திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழக அரசையும் முதல்வர் ஸ்டாலினையும் அதிமுக, பாஜக வினர் மிகக் கடுமையாக விமர்சிக்கின்றனர். அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் பாஜகவே தீவிரமாக திமுகவை எதிர்த்து வருகிறது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார்.
துபாய்க்கு செல்ல எத்தனையோ விமானங்கள் இருந்தும் ஆனால் விமானமே இல்லை என காரணம் கூறி முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்துடன் தனி விமானத்தில் துபாய் சென்றது ஏன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். முதல்வர் ஸ்டாலினின் இந்த பயணம் அரசு முறை பயணமா அல்லது அரசர் முறை பயணம் என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழக அரசையும் முதல்வர் ஸ்டாலினையும் அதிமுக, பாஜக வினர் மிகக் கடுமையாக விமர்சிக்கின்றனர். அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் பாஜகவே தீவிரமாக திமுகவை எதிர்த்து வருகிறது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். சமீபத்தில் திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வெளி வந்துள்ள ஜெயக்குமார், சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் அமைந்துள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் 5 கோடி ரூபாய் நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக ஜாமின் நிபந்தனையின்படி கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஏற்கனவே கடந்த இரண்டு வாரங்களாக திருச்சி கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் நீதிமன்ற உத்தரவுபடி ஆஜராகி கையெழுத்திட்டேன், அதே போல ஒவ்வொரு திங்களும் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை ஏற்று ஆஜராகி கையெழுத்திட்டுள்ளேன். மேலும் சனி ஞாயிறு உட்பட மீதமுள்ள நாட்களில் ராயபுரம் N1 காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட உள்ளேன் என்றார். தொடர்ந்து பேசிய அவர், பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைத்தும் அவர்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஆனால் அத்தகையவர்கள் திமுக தேர்தல் வாக்குறுதிகளாக அளித்த பழைய பென்ஷன் திட்டம், ஊதிய உயர்வு 100 ரூபாய் கேஸ் மானியம், கல்விக் கடன் ரத்து உள்ளிட்டவை காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன. இந்நிலையிலும் அவர்களுக்கு எதிராக ஏன் போராட்டம் நடத்தாமல் மௌனமாக இருக்கின்றனர் என கேள்வி எழுப்பினார். தமிழக அரசு முழுக்க முழுக்க தொழிலாளர் விரோத போக்கை முன்னெடுத்து வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

முதலமைச்சர் ஸ்டாலினின் துபாய் பயணத்தை மேற்கொள்ள காட்டிய அவர், துபாய்க்கு செல்ல எத்தனையோ விமானங்கள் இருந்தும், விமானங்கள் இல்லை எனக் கூறி தன் குடும்பத்தினருடன் தனி விமானத்தில் ஸ்டாலின் துபாய் சென்றது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். இந்த பயணம் அரசு முறை பயணமா? அல்லது அரசர் முறை பயணமா? என்ற அவர் முதலீட்டை ஈர்க்கவா? முதலீடு செய்யவா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்டாலின், குடும்பத்தினரின் நடவடிக்கைகளையெல்லாம் பார்க்கும்போது திமுக ஒரு குடும்ப கட்சி என்பதற்கு மக்களே சாட்சி என்றார். அதுமட்டுமல்ல நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக என்ன நிலைப்பாட்டை எடுத்ததோ அதேபோன்று சட்டப் போராட்டத்தை தான் திமுக அரசும் தற்போது முன்னெடுத்துள்ளது என்றார். கூடிய விரைவில் திமுக மத்திய பாஜக அரசுக்கு அடிமை வேலை செய்யக்கூட தயாராகிவிடும் என்றும் அவர் விமர்சித்தார்.
