உதயநிதி வாங்கவில்லை. கடுப்பான தொண்டர் ஒருவர், மனுவை, உதயநிதி முகத்தில் ராக்கெட் விடுவது போல வீசியிருக்கிறார்.
விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் எனும் தலைப்பில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் அரியலூர் மாவட்டம், காடராதித்தம் கிராமத்தில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, திருமானூர் சென்ற போது, திருமானூரை சேர்ந்த தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகர் மனோஜ் கையில் கட்சி கொடியுடன் உதயநிதி ஸ்டாலின் சென்ற வாகனத்தை மறித்தார்.
திருமானூரில் உள்ள மூப்பனார் அரங்க மேடை அலங்கரிக்கப்பட்டு அங்கு உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அதன் மேலே எழுதப்பட்டிருந்த மூப்பனார் அவர்கள் பெயரை திமுகவினர் மறைத்துள்ளனர். அது அரசு நிதியில் கட்டப்பட்ட அரங்க மேடை. அந்த மேடைக்கு மூப்பனார் அரங்க மேடை என்று உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாகம் பெயர் சூட்டி இருந்தது.
அந்த அரங்கமேடையின் முகப்பு பகுதியில் எழுதப்பட்டிருந்த மூப்பனார் பெயரை திமுகவினர் அழித்ததால் கொதிப்படைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் உதயநிதி ஸ்டாலின் காரை மறித்தனர். அவரிடம் ஆவேசமாகவும் இது குறித்து கேட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
அதேபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி பிரசாரம் செய்த போது, மேடையில் நின்றபடி, கீழே கூடியிருந்த தொண்டர்களிடம் கை குலுக்கினார். அப்போது, சில தொண்டர்கள், தங்களுடைய கோரிக்கைகளை மனுவாக, உதயநிதியிடம் நீட்டினார்கள். அதை, உதயநிதி வாங்கவில்லை. கடுப்பான தொண்டர் ஒருவர், மனுவை, உதயநிதி முகத்தில் ராக்கெட் விடுவது போல வீசியிருக்கிறார். இதனால், அதிருப்தியான உதயநிதி, சட்டென அங்கிருந்து கிளம்பி விட்டார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 1, 2021, 5:00 PM IST