முக்கியமான கட்சியிலிருந்து  ஒரு பெரும்புள்ளி பாஜகவில் இணைய உள்ளதாக பாஜக துணை செயலாளர் ஏ.பி.முருகானந்தம் சூசகமாக தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ஏ.பி.முருகானந்தம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’முக்கியமான கட்சியிலிருந்து  ஒரு பெரும்புள்ளி, வெளியே வரக் காத்திருக்கிறது. பெயரின் முதல் எழுத்து நாளை வெளியிடப்படும்’’எனத் தெரிவித்துள்ள அவர் அந்த நபரின் பெயரின் முதல் எழுத்து பி என்கிற எழுத்தில் தொடங்கும் என அவர் தெரிவித்துள்ளார். 

 

அதற்கு கீழே கமெண்ட் போட்டுள்ள பலர் அவருக்கு ‘முடி’இருக்குமா எனக்கேட்டுள்ளனர். அதற்கு ஆம் எனப்பதிவிட்டுள்ளார் முருகானந்தம். இதன் மூலம் திமுகவிலிருந்து பொன் முடி வெளியேறக்கூடும் என கருதப்படுகிறது. முன்னதாக திமுக துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி திமுகவில் இருந்து பாஜகவில் இணைந்தார். அவரை தொடர்ந்து பலரும் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இதனால் திமுகவினர் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.