கருப்பர் கூட்டம் கொளுத்திப்போட்ட கந்தசஷ்டி கவசம்.தமிழகத்தில் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.இதனால் தான் திமுகவில்1கோடி இந்துக்கள் இருக்கிறார்கள்.யாருடைய மனதையும் துன்புறுத்தவில்லை என்றெல்லாம் திமுக மக்கள் மன்றத்தில் விளக்கம் அளித்திருக்கும் நிலையில் கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்கு முதன் முறையாக திமுக தொண்டர்கள் வாழ்த்து சொல்லி போஸ்டர் அடித்து தலைமையை அதிரவைத்துள்ளார் திமுக வட்டச் செயலாளர் ஒருவர்.

இந்துக்கள் என்றால் திருடன் என்றார் கருணாநிதி, அவரது மகனும் தற்போதைய தி.மு.க தலைவருமான ஸ்டாலின் இந்துக்கள் கோவிலில் பூர்ண கும்ப மரியாதை தந்து குங்குமம் வைத்தால் கூட அதை அங்கேயே அழித்த வரலாறு கொண்டவர், கட்சியில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வரும் ஆ.ராசா'வோ "யாருய்யா இந்து, அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது" என பேசி வருகிறார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம்.ஆலந்தூர் தெற்கு பகுதி வட்டச்செயலாளர் நடராஜன் திமுக சார்பில்  கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் அடித்த அசத்தியுள்ளார்.

 அரசியல் ஆர்வலர்களோ 2021 சட்டமன்ற தேர்தலில் இந்துக்கள் வாக்கு வங்கி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்லி வரும் வேளையில் தலைமை அமைதியாக இருந்தாலும் தலைமையை பொருட்படுத்தாமல் வரும் சட்டமன்றத்தேர்தலை மனதில் வைத்து வேலையை தொடங்கியிருக்கிறார்.திமுக தலைமை இவர் மீது நடவடிக்கை எடுக்குமா? இல்லை இதை ஆதரிக்குமா? என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் மற்ற உடன்பிறப்புகள்.