திமுக தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஐடியாவை காப்பியடித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டதால் காங்கிரஸ் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.

 

காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட உள்ள திமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், ’வாடிக்கையாளர்கள் வங்கிகளில் குறைந்தபட்ச தொகை வைக்காத காரணத்திற்காக வசூலிக்கப்பட்ட தண்டக் கட்டணத் தொகைகள் முழுவதுமாக வட்டியுடன் வாடிக்கையாளர்களுக்கு திரும்ப அளிக்கப்படும்’’ என கூறப்பட்டிருந்தது.

கடந்த 5 ஆண்டுகளில் இப்படி வசூலிக்கப்பட்ட தொகை அனைத்தையும் மீண்டும் வாடிக்கையாளர்களிடம் கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியை காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சேர்க்க முடிவெடுத்து இருந்தாராம் ப.சிதம்பரம். இதை வெளிப்படையாகவே கடந்த வாரம் தேவகோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் அறிவித்து இருந்தார். அப்போது, “சாமானியர்கள் மீது வங்கிகள் விதித்த அபராதத் தொகையை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் திருப்பிக் கொடுப்போம் என நான் தலைமையைக் கேட்காமலே ஏற்கெனவே அறிவித்து விட்டேன்.

 

அதன்பிறகு தலைமையிடம் கேட்டேன். அவர்களும் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். அதனால்தான் சொல்கிறேன். உங்களிடம் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை உங்களிடமே வந்து சேரும்” என்று அவர் கூறியிருந்தார். இந்நிலையில் அதே அறிக்கையை கூட்டணியில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அறிவித்துள்ளது காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.