Asianet News TamilAsianet News Tamil

பாமக கோரிக்கையை ஏற்ற திமுக.. மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அன்புமணி..!

வயது வரம்பு உயர்வு அடுத்த ஆண்டு வரை மட்டுமே செல்லும் என அரசு அறிவித்திருப்பது நியாயமல்ல. அடுத்த ஆண்டிற்குள் 42 வயதைக் கடந்த அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்க முடியாது. எனவே, வயது வரம்பு உயர்வு குறைந்தது பத்தாண்டுகளுக்கு செல்லும் என்று அறிவிக்க வேண்டும்! என பதிவிட்டுள்ளார்.

DMK to accept PMK request.. Anbumani who expressed happiness
Author
Tamil Nadu, First Published Oct 19, 2021, 3:15 PM IST

வயது வரம்பு உயர்வு அடுத்த ஆண்டு வரை மட்டுமே செல்லும் என அரசு அறிவித்திருப்பது நியாயமல்ல என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- அரசுப் பள்ளி ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 40-லிருந்து 45ஆகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45-லிருந்து 50ஆகவும் உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டிருப்பது  வரவேற்கத்தக்கது. இது 40 வயதைக் கடந்தவர்களின் ஆசிரியர் பணி கனவை நனவாக்க உதவும்!

ஆசிரியர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பை அகற்ற வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. கடந்த ஒரு மாதத்தில் மருத்துவர் அய்யா இருமுறை இந்த கோரிக்கையை வலியுறுத்தினார். பா.ம.க.வின் கோரிக்கை ஓரளவாவது ஏற்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

வயது வரம்பு உயர்வு அடுத்த ஆண்டு வரை மட்டுமே செல்லும் என அரசு அறிவித்திருப்பது நியாயமல்ல. அடுத்த ஆண்டிற்குள் 42 வயதைக் கடந்த அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்க முடியாது. எனவே, வயது வரம்பு உயர்வு குறைந்தது பத்தாண்டுகளுக்கு செல்லும் என்று அறிவிக்க வேண்டும்! என பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios