Asianet News Tamil

அடுத்த விக்கெட்டை தூக்கும் தி.மு.க!! ஆபரேஷனை தொடங்கிய சபரீசன் டீம்... அசால்ட்டா சிக்கும் ஆண்டிபட்டி தங்கம்...

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் பாலாஜி, தான் இருந்த அனைத்துக் கட்சிகளிலும் அம்மாவட்டத்தின் முக்கியப் புள்ளியாக இருந்த நிலையில். திமுக-வில் செந்தில் பாலாஜி இணைந்த பிறகு , ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், இன்று அவர் அம்மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

DMK Target AMMK Andipatti Thanga thamizh selvan
Author
Chennai, First Published Jan 29, 2019, 7:55 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

திமுகவில் பொறுப்பு வாங்கிய கையேடு தினகரனின் கூடாரத்தில் இருக்கும் சில முக்கிய புள்ளிகளை திமுகவிற்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ள தினகரனின் கம்பியூட்டராக விளங்கிய செந்தில் பாலாஜி களத்தில் இறங்கியுள்ளார். அதன் முதல் முயற்சியாக தினகரனின் அமமுக கட்சியை சேர்ந்த கோவை தெற்கு மாவட்ட இலக்கிய அணித் தலைவர் பொன்மலை குமாரசாமி  திமுகவில் இணைந்தார். 

இதற்கு முன்பாக தினகரனின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்த எப்போதும் தன்னுடைய தம்பி, கம்பியூட்டர் என வாய்க்கு வாய் புகழும்  செந்தில் பாலாஜி போனதில் இருந்தே தொடர்ந்து ஆண்டிப்பட்டி தங்கத்தை, எப்படியாவது இழுத்தே ஆக வேண்டும் என திமுகவில் தொடர் முயற்சிகள் நடந்து வருகிறது. கரூரில்  திமுக இருந்ததைப் போலவே ஆண்டிப்பட்டியில் அதள பாதாளத்தில் கவிழ்த்துக் கிடைக்கிறதாம்.  இதனால் தங்க தமிழ்ச்செல்வன் வந்துவிட்டால், தேனி மட்டுமல்லாமல், பெரிய தல இல்லாமல் தவிக்கும் மதுரை வரை அட்ச்சி தூக்க பிளான் போட்டது திமுக. 

இந்நிலையில், ஜெயலலிதா மறைந்ததும் கூவத்தூர் மேட்டருக்குப் பின் தினகரன் திஹாருக்கு டூர் போன சமயத்தில்  திமுகவை சேர்ந்த பெரும் புள்ளி ஒன்று  ஆண்டிப்பட்டி தங்கத்தை மரியாதை நிமித்தமாக ரகசிய  சந்திப்பு நடத்தியுள்ளது.

அப்போது நீங்க ‘எந்த நம்பிக்கையில் இன்னும்  டிடிவிய நம்பிட்டு இருக்கீங்க? இடைத்தேர்தலே வந்தாலும் நீங்க அதே தொகுதியில் நின்னு உங்களால ஜெயிக்க முடியும்னு  நினைக்கிறீங்களா?  அவரு சல்லி காசு அவுக்க மாட்டாரு எப்படி நீங்களே  சமாளிப்பீங்க? எனக் கேட்டுவிட்டு வந்தாராம்.

இது நடந்து ரொம்ப நாள் ஆன நிலையில் தற்போது செந்தில் பாலாஜி திமுகவில் சேர்தத்துக்கு அப்புறம், மாற்றுக கட்சியில் இருக்கும் சில பெரும்  சில லோக்கல் கைகளை திமுகவிற்கு இழுத்து வர, சபரீசன் ஆப்ரேஷன் தொடங்கினார் அதில் முதல் முயற்சியாக, அதிமுகவின் முன்னாள் அமைச்சராக இருந்த கொங்கு மண்டலத்தில் தனி ராஜ்ஜியம் செய்து கொண்டிருந்த செந்தில் பாலாஜியை தூக்கியது.

இந்நிலையில், கடந்த முறை சந்தித்த அதே முக்கிய புள்ளி இப்போது சபரீசனின் ஆப்ரேஷன் டீமில் இருப்பதால் பழைய டீலிங்கை மீண்டும் தொடங்கியதால், நம்ம கட்சிக்கு புதுசா வந்த செந்தில்பாலாஜி அண்ணன் கிட்ட நீங்க கேட்டுப் பாருங்க. அவருக்கான மரியாதை என்ன செஞ்சு கொடுத்திருக்கோம்னு உங்களுக்கே தெரியும். நீங்க இங்கே வந்தால் உங்களுக்கான மரியாதை நிச்சயமாக கிடைக்கும்.  நீங்கதான் அடுத்த மா.செ.  ஆட்சி வந்ததும் நீங்க அமைச்சர் அதுல சந்தேகமே வேண்டாம் என சொல்ல, அதுக்கு ஆண்டிபட்டி தங்கமோ,  ‘யோசிச்சு சொல்றேன்’ என சொல்லிவிட்டாராம்.

யோசிக்கிறேன் என சொன்னதும், கரூர் செந்தில் பாலாஜியும் தேனி பக்கம்  தனது பழைய நண்பன் தங்கத்தை சந்திக்க சென்றதாக தினகரன் காதுக்கு சென்றதால், அலண்டு போயுள்ளாராம் ஆர்.கே.நகர் நாயகன், ஏனென்றால் எந்த நேரத்திலும் ஆண்டிபட்டி தங்கம் தனக்கு அல்வா கொடுப்பார் என ஏற்கனவே தெரியுமாம். 

Follow Us:
Download App:
  • android
  • ios