Asianet News TamilAsianet News Tamil

மு.க.ஸ்டாலினை உதாசினப்படுத்தி எடப்பாடி புகழ்ந்த திமுக முக்கிய புள்ளி... அதிரடியாக பதவி பறிப்பு...!

கொரோனா' வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற, பிரதமரும், முதல்வரும் சிறப்பாக செயல்படுகின்றனர். இன்றைய சூழலில் மக்கள் நலன் கருதி, வேளாண் பணிகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளித்திருப்பது, முதல்வரின் ஆளுமை திறனை காட்டுகிறது. அனைத்து தமிழக விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டுகிறோம். இந்த இக்கட்டான கட்டத்தில் கலெக்டர்கள், உயரதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஆலோசனையோடு அரசு செயல்படுவதுதான் சிறந்த வழிமுறை. 

dmk suspended kp ramalingam posting...mk stalin action
Author
Tamil Nadu, First Published Mar 30, 2020, 12:46 PM IST

திமுக விவசாய அணி மாநில செயலாளர் பொறுப்பிலிருந்து முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் அதிரடியாக நீக்கப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பில் மாநிலம் முழுதும் நிலவும் உண்மை நிலையை அறிந்து, நடவடிக்கைகள் எடுக்க, அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும் என  தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் தேவையற்றது, அதை வலியுறுத்த வேண்டாம்' என, இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்க தலைவரும், தி.மு.க., முன்னாள் எம்.பி.,யும், மாநில விவசாய அணி செயலாளருமான கே.பி.,ராமலிங்கம் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

dmk suspended kp ramalingam posting...mk stalin action

அதில், கொரோனா' வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற, பிரதமரும், முதல்வரும் சிறப்பாக செயல்படுகின்றனர். இன்றைய சூழலில் மக்கள் நலன் கருதி, வேளாண் பணிகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளித்திருப்பது, முதல்வரின் ஆளுமை திறனை காட்டுகிறது. அனைத்து தமிழக விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டுகிறோம். இந்த இக்கட்டான கட்டத்தில் கலெக்டர்கள், உயரதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஆலோசனையோடு அரசு செயல்படுவதுதான் சிறந்த வழிமுறை. அதைவிடுத்து வீடியோ கான்பரன்சில் அனைத்து கட்சி தலைவர்களோடு ஆலோசிக்க வேண்டும் என்ற கோரிக்கை அவசியமற்றதாக கருதுகிறேன். 

dmk suspended kp ramalingam posting...mk stalin action

அவசியமான, அத்தியாவசியமான கருத்து இருந்தால், கட்சித் தலைவர்கள் மின்னஞ்சலில் முதல்வருக்கு அனுப்பலாம். அதை விடுத்து ஆலோசனை கூட்டம் நடத்தினால், ஒவ்வொரு தலைவர்களும் பேசி முடிப்பதற்குள், இத்தாலிபோல் இந்தியாவும் பாதுகாப்பற்ற நாடாக மாறிவிடும் அபாயம் உள்ளது. '144' தடை என்றால் அரசியல் நடவடிக்கைகளுக்கும் தடைதான். ஆகவே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தகூடாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டுமென்று, தி.மு.க., தலைவர் ஸ்டாலின்தான், வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் அக்கூட்டம் தேவையற்றது என்று, தி.மு.க., முன்னாள் எம்.பி., கருத்து தெரிவித்திருந்தது திமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

dmk suspended kp ramalingam posting...mk stalin action

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக விவசாய அணி மாநில செயலாளர் டாக்டர் கே.பி.ராமலிங்கம் அவர்கள், அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். தலைமைக்கு எதிராக கருத்தை தெரிவித்த 24 மணிநேரத்தில் அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios