Asianet News TamilAsianet News Tamil

தி.மு.க. ஜெயிக்கப்போகும் தொகுதிகள்... அதிரடி சர்வே... பதற்றத்தில் ஸ்டாலின்..!

தாங்கள் போட்டியிடும் 20 தொகுதிகளில் தன் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? என்பது பற்றி ஒரு சர்வே எடுத்திருக்கிறார் மனிதர். அதன் ரிசல்ட் ரிப்போர்ட்டை லேசாக ஸ்மெல் செய்துவிட்ட தி.மு.க. முக்கிய புள்ளிகள், அதை மெதுவாக வெளியே கசிய விட்டுள்ளனராம். அதில் கிடைத்த தகவல்கள் இதோ ஹாட் & ஷார்ப்பாக...

DMK Survey
Author
Tamil Nadu, First Published Mar 27, 2019, 6:05 PM IST

மனைவி உள்ளே பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருக்க, வெளியே கைபிசைந்து நிற்கும் கணவனின் மன ஓட்டத்துக்கு நிகரானது தலைவர்களுக்கு தேர்தலின் ரிசல்ட் தேதியும். வெளியே மைக்கை நீட்டி, கேமெராவை காட்டியபடி காத்துக் கிடக்கும் மீடியாக்கள், டி.வி.யில் ‘முன்னிலை! தோல்வி முகம்’ என்று மாறி மாறி வரும் போட்டோக்கள் என ஆரம்பித்து ஜெயித்தால் கிடைக்கப்போகும் அதிகாரங்கள், தோற்றால் வந்து சேரும் ஏளனங்கள்...என எல்லாமே ஆட்டிப் படைத்து பி.பி. எகிற வைக்கும் நாள் அது. DMK Survey

ஆனால் சில தலைவர்கள் அந்த மெயின் பிக்சருக்கு முன்னாடியே சில டீசர்களை ஓட்டிப் பார்த்து தங்களின் மன நிலையை தயார் செய்து கொள்வார்கள். அப்பேர்ப்பட்டவர்களில் வெகு சுட்டிதான் ஸ்டாலின். தாங்கள் போட்டியிடும் 20 தொகுதிகளில் தன் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? என்பது பற்றி ஒரு சர்வே எடுத்திருக்கிறார் மனிதர். அதன் ரிசல்ட் ரிப்போர்ட்டை லேசாக ஸ்மெல் செய்துவிட்ட தி.மு.க. முக்கிய புள்ளிகள், அதை மெதுவாக வெளியே கசிய விட்டுள்ளனராம். அதில் கிடைத்த தகவல்கள் இதோ ஹாட் & ஷார்ப்பாக... 

* கடலூர் வேட்பாளர் ஸ்ரீரமேஷ் அறிமுகமில்லாத முகம். கட்சியினர் மத்தியில் செல்வாக்கே இல்லாத நிலையில் வெற்றி கடினமாம். 

* எ.வ.வேலுவின் சிபாரிசில் சீட் வாங்கியிருக்கும் அண்ணதுரைக்கு சாதகமாகவே சூழல் உள்ளதாம். 

* தி.மு.க.வில் பலரது எரிச்சலுக்கும் உள்ளான மாஜி மினிஸ்டர் பொன்முடியின் மகன் கவுதமசிகாமணியே இங்கு வேட்பாளர். எதிர்தரப்பில் சுதீஷ் தீயாக வேலை செய்ய முயல்வதால் சிகாவுக்கு சிக்கலே. பணத்தை இறக்காமலே இருந்தால் சொந்த கட்சியினரே பொன்முடி வாரிசை அன்லைக் செய்வார்களாம். 

* மயிலாடுதுறையில் போட்டியிடும் ராமலிங்கம் லோக்கலில் செல்வாக்கான மனிதர். ஆனால் டி.டி.வி. டீமின் ஆதிக்கம் கிலி கிளப்புகிறதாம். 

* மீண்டும் பழனிமாணிக்கம் தஞ்சையில் நிற்கிறார். தினகரன் கோஷ்டி அடிச்சு தூக்கும் இந்த ஏரியாவில் பணத்தை அள்ளி வீசினால் பழனி மீண்டும் டெல்லியிலாம். 

* திருநெல்வேலி தொகுதியில் ஞான திரவியத்துக்கு பெரும் சிக்கலாக அ.தி.மு.க. நிமிர்ந்து நிற்கிறது. ஒட்டுமொத்தமாக மக்களின் மனநிலை தி.மு.க. கூட்டணியை ஆதரித்தால் மட்டுமே வெற்றியாம். 

* தென்காசி வேட்பாளர் தனுஷ்குமாருக்கு அவரது தந்தை தனுஷ்கோடியின் கெட்ட பெயரே வில்லனாகி உள்ளதாம். 

* ஐ.பெரியசாமி மற்றும் அவரது மகன் செந்தில் இருவரும் இணைந்து திண்டுக்கல் வேட்பாளர் வேலுச்சாமியை வெற்றிச்சாமியாக்கிடுவார்களாம். 

* சொந்த கட்சியினர், மக்கள் என்று யாருக்குமே அறிமுகமில்லாத பொள்ளாச்சி வேட்பாளர் சண்முகசுந்தரத்துக்கு, சிட்டிங் எம்.பி. மகேந்திரனின் செல்வாக்கு பெரும் அதிர்ச்சி. பொள்ளாச்சி பாலியல் பஞ்சாயத்தை தாண்டி மகியை மக்கள் நேசிப்பதாய் தகவல். 

* முதல்வரின் சொந்த தொகுதியான சேலத்தில் நிற்கும் பார்த்திபனுக்கு ஆளுங்கட்சி வேட்பாளர் சரவணனின் செல்வாக்கு கிலி கிளப்புகிறது. சொந்த கட்சி சண்டைகள் மறுபுறம் குழி வெட்டுகின்றன. 

* ஆளும் அணியின் அன்புமணி, அ.ம.மு.க.வின் முக்கிய முகம் பழனியப்பன் ஆகியோரை எதிர்த்து தாண்டி வந்து தர்மபுரி வேட்பாளர் செந்தில்குமார் வென்றால் அது சாதனையே. 

* துரைமுருகன் தன் மகனுக்கு வேலூரை வாங்கிக் கொடுத்ததில் யாருக்கும் இஷ்டமில்லை. ஆளும் கூட்டணியின் ஏ.சி.சண்முகம் வேறு பணத்தை அள்ளி வீசுகிறார். கதிர் ஆனந்துக்கு வெற்றி ஆனந்தம் வாய்ப்பது பெரும் பாடு. 

* நீலகிரியில் நிற்கும் ராசாவுக்கு மலைப்பகுதியின் மூன்று சட்டசபைகளும் சாதகம். ஆனால் கீழே வரும் மூன்று தொகுதிகள் செம்ம ரிஸ்க். அதை சமாளித்தால் ஹிட். 

* கனிமொழியின் அயராது உழைப்பால் தூத்துக்குடி அவருக்கு சொந்தமாக வாய்ப்புள்ளது. தமிழிசை நிற்பதும், ஸ்டெர்லைட் சர்ச்சைகளும் கூடுதல் பலம். ஆனாலும் அக்கறை தேவை. 

* அரக்கோணத்தில் பெரும் மில்லியனர் ஜெகத்ரட்சகன், பணத்தை தூக்கி வாரிப்போட்டு பிரசாரத்தில் நிற்கிறாராம். ஆனால் ஏ.கே.மூர்த்தியின் செல்வாக்கு சிக்கல் தரலாம். ஆனாலும் கம்யூனிஸ்டுகளின் தோளும் கிடைப்பதால் ஜெகத் இஸ் ஹேப்பி நவ். 

* தி.மு.க.வின் ஏழை வேட்பாளர் செல்வம் போட்டியிடும் காஞ்சிபுரத்தில் அவரது எதிர் வேட்பாளர்கள் செல்வாக்கு மற்றும் பணத்தால் அடிக்கின்றனர். கட்சி காசு கொடுத்தால் செல்வத்துக்கு வாய்ப்பு  உண்டு. 

* ஸ்ரீபெரும்புதூரில் டி.ஆர்.பாலுவுக்கு உட்கட்சி பஞ்சாயத்து பெரிய தலைவலிதான். ஆனாலும் பூத் கமிட்டிகளுக்கு அவர் கொடுத்துவிட்ட பணம் கட்சியினரை குஷிப்படுத்தியுள்ளதால் முன்னேறி வருகிறாராம். ஆனால் மக்கள் மனசு?

* ஆற்காட்டார் மகன் கலாநிதி போட்டியிடும் வடசென்னை தொகுதியில் எதிர்கட்சி வேட்பாளர்கள் சவாலானவர்கள் இல்லை. மேலும் இது தி.மு.க.வுக்கு வசதியான தொகுதி. ஆனால் வேட்பாளர் விஷயத்தில் மன வருத்தத்தில் இருக்கும் சேகர்பாபுவின் அலட்சியத்தால் பிரச்னை வரலாம். இருந்தாலும் கலாநிதிக்கு இப்போ நிலைமை கூல்.

* தயாநிதி மாறன் போட்டியிடும் மத்திய சென்னையில் நிலைமை இப்படியுமில்லை, அப்படியுமில்லையாம். கார்ப்பரேட் வேட்பாளரான தயாவிடம் பேசுவதற்கே அவரது கட்சியினர் பெரிதாய் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் கட்சியினரை திருப்திப்படுத்த பண ஃபார்மாலிட்டிகளை சரியாக முடித்துவிட்டால் தயாவுக்கு வெற்றி கிட்டலாம். 

* தொகுதியின் பாதி பகுதிகள் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு பிளஸ். ஆனால் மீதியோ ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தனுக்கு ஆதரவாக இருப்பதாக தகவல். எனவே தமிழச்சி அவ்வளவு எளிதாக வெல்ல முடியாது. அதேபோல் மாநிலம் முழுவதும் மக்கள் தி.மு.க. அணியை ஆதரித்தால் இந்த தமிழச்சி டெல்லியில்...............இப்படி வந்து விழுகிறது தகவல். இதெல்லாம் அப்படியே நடக்குமா? பார்க்கலாம் பார்க்கலாம்!

Follow Us:
Download App:
  • android
  • ios