Asianet News TamilAsianet News Tamil

கனிமொழி கண்ணசைவில் திமுக அனுதாபிக்கு கிடைத்த விருது... சர்ச்சையில் சிக்கிய மஃபா.பாண்டியராஜன்..!

திமுகவின் ஏஜெண்டாக செயல்பட்டு வரும் ஒருவருக்கு தமிழக அரசின் 2019ஆம் ஆண்டுக்கான 'உலகத் தமிழ் சங்க விருதான' இலக்கிய விருது அதிமுக அரசு வழங்க இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

dmk suppoter  won the award in Kanimozhi recommend to Mafa.Pandiyarajan
Author
Tamil Nadu, First Published Jan 18, 2020, 3:38 PM IST

திமுகவின் ஏஜெண்டாக செயல்பட்டு வரும் ஒருவருக்கு தமிழக அரசின் 2019ஆம் ஆண்டுக்கான 'உலகத் தமிழ் சங்க விருதான' இலக்கிய விருது அதிமுக அரசு வழங்க இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழக அரசின் 2019ஆம் ஆண்டுக்கான 'உலகத் தமிழ்ச் சங்க விருது' பட்டியைலை தமிழக அரசின் தமிழ் பண்பாட்டுத்துறை அறிவித்துள்ளது. இந்தப்படியலில் இலக்கிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் மலேசிய எழுத்தாளர் சங்க தலைவர் ராஜேந்திரன் பெருமாள். இவர் இலக்கிய வட்டத்தை மட்டுமே சார்ந்தவராக இருந்தால் சர்ச்சை எழுந்திருக்காது. மலேசிய தமிழர்களிடையே திமுகவின் முகமாக பார்க்கப்படுபவர். பக்கா திமுக சார்பாளர். மலேசிய சுற்றுலா செல்லும் திமுக நிர்வாகிகளுக்கு அனைத்துவிதமான பணிவிடைகளையும் செய்து விழுந்து விழுந்து கவனிப்பார். 

dmk suppoter  won the award in Kanimozhi recommend to Mafa.Pandiyarajan

அதேபோல் தமிழகம் வந்தால் பெரியகுளம் அருகில் உள்ள வைரமுத்துவின் பண்ணை வீட்டில் தங்கி திமுக புள்ளிகளுடன் நட்பை வளர்த்துக் கொள்வார்.  பொதுவாக முதலமைச்சரையோ, அமைச்சர்களையோ பார்க்க வரும்போது முன்னதாகவே சந்திப்புக்கு அனுமதி பெற வேண்டும். ஆனால், இவர் மலேசியாவில் இருந்து சிலரை அழைத்துக் கொண்டு எந்தவித முன்னேற்பாடுகளையும் செய்யாமல் விமான நிலையத்தில் இறங்கி விடுவாராம். ஏதோ பஸ்டாண்டில் நின்று கொண்டு கவுன்சிலரை பார்க்க நேரம் கேட்பதை போல இங்கு வந்து இறங்கிய பிறகே தான் மலேசியாவில் இருந்து வந்துள்ளேன். முதலமைச்சரை பார்க்க உடனே அனுமதி வேண்டும் எனக் கேட்பாராம். dmk suppoter  won the award in Kanimozhi recommend to Mafa.Pandiyarajan

பஸ்டாண்டில் இருந்து கேட்டால் கவுன்சிலரை பார்க்கவே நேரம், கிடைக்காது. முதல்வருக்கு உள்ள பிஸியான பணிகளில் இவருக்கு மட்டும் உடனே அனுமதி கிடைத்துவிடுமா என்ன? முறைப்படி முன்னரே திட்டமிட்டு வந்தால் அனுமதி மறுக்கப்படுவதற்கில்லை. திட்டம் போட்டு காரியம் சாதிப்பதற்காகவே அவர் இப்படி அனுமதி கேட்காமல் வருவது தான் அவரது நோக்கம். இந்த நரித்திட்டம் உடன் வருபவர்களுக்கு தெரியாது. 

அனுமதி கிடைக்கவில்லை எனக்கூறி தனது நோக்கத்தை கச்சிதமாக ஆரம்பிப்பார். ’’அதிமுக ஆட்சியில் நம்மை மதிக்க மாட்டார்கள். தமிழை மதிக்க மாட்டார்கள். தமிழ் பற்றாளர்களை பார்க்கவே மாட்டார்கள்’’என உடன் வந்திருப்பவர்களிடம் கொளுத்திப்போடுவார். அவ்வளவு தூரம் பயணப்பட்டு வந்திருப்பவர்களுக்கு அதிருப்தி ஏற்படுவது இயல்பே.  அந்த அதிருப்தியை உருவாக்கி விட்டு உடனே அவர்களின் மனதை மடைமாற்றம் செய்து விடுவாராம்  ராஜேந்திர பெருமாள்.
 
அதாவது, ’அதிமுக தான் அப்படி. ஆனால் திமுக தமிழை, தமிழ்ப்பற்றாளர்களை மதிக்கக்கூடிய கட்சி. தலைவர்கள் முதல் நிர்வாகிகள் வரை பணிவானவர்கள். நீங்கள் அவர்களை பார்க்க வேண்டுமானால் உடனே ஏற்பாடு செய்கிறேன்’எனக் கூறி அவர்களை திமுக அனுதாபியாக மாற்றி விடுவாராம். dmk suppoter  won the award in Kanimozhi recommend to Mafa.Pandiyarajan

சரி, அப்படிப்பட்ட திமுக அனுதாபிக்கு அதிமுகவில் எப்படி விருது அறிவிக்கப்பட்டது..?  ராஜேந்திர பெருமாளுக்கு கனிமொழியுடன் நெருங்கிய நட்புண்டு. அந்த அடிப்படையில் அவர் கனிமொழியை நாட, அவர் தனது சமூகத்தை சேர்ந்த அமைச்சரான மஃபா பாண்டியராஜனிடம் கூறி இருக்கிறார். கனிமொழியுடனான நட்பை புறக்கணிக்க முடியாத மஃபா.பாண்டியராஜன் தான் சார்ந்த அமைச்சரவை மூலம் வழங்கப்படும் விருதுப்பட்டியலில் ராஜேந்திர பெருமாளை சேர்த்து விட்டுள்ளார். 

அதுவரை எந்த அதிமுகவினரையும் பார்க்காத ராஜேந்திர பெருமாள், இந்த விருதை பெறுவதற்காக மஃபா. பாண்டியராஜனின் அறிவுரையின் பேரில் ஓ.பி.எஸை சந்தித்து இருக்கிறார். உலக தமிழாராய்ச்சி மையம் சார்பாக இந்தி மொழி படிக்க நிதி உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கி வரும் மஃபா.பாண்டியராஜன் இந்த விருதை திமுக அனுதாபிக்கு வழங்கி மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார் எனக் கூறுகிறார்கள்.

dmk suppoter  won the award in Kanimozhi recommend to Mafa.Pandiyarajan
 
திமுக, விசிக கட்சிகளின் சார்பாக ஆண்டுதோறும் தங்களுக்கு சார்பானவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. ஆனால், அதிமுக சார்பாவர்களுக்கு  இதுவரை விருது வழங்கியதே இல்லை. அதிமுகவில் இலக்கியத்துக்காக பங்களிப்பு செய்த முத்துலிங்கம், புலமைபித்தன் போன்ற அதிமுகவின் ஆரம்பகட்ட இலக்கியவாதிகளை பெருமைப்படுத்த எந்த முயற்சியும் கட்சியின் சார்பாக எடுத்ததில்லை. 

இதனை அறிந்த மலேசிய தமிழர்கள் அதிமுக அரசாங்கத்தில் திமுக ஆதரவாளருக்கு விருதா? என குமுறுகிறார்கள். அட அங்கு மட்டுமா? தமிழகத்தில் உள்ள ரத்தத்தின் ரத்தங்களும் சூடேறிக் கிடக்கிறார்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios