சந்திரயான் 2 லேண்டரில் இருந்து சிக்னல் கிடைக்காதது பின்னடவை ஏற்படுத்தி உள்ள நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமல்ல நாட்டு மக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர். ஆனால், இதனை திமுக ஆதரவாளரான வே.மதிமாறன் கிண்டலடித்துள்ளார். 

சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம், கட்டுப்பாட்டு மையத்தின் உடனான சிக்னலை இழந்தது. இதனால், திட்டமிட்டபடி, லேண்டர் தரையிறங்கியதா என்பதை விஞ்ஞானிகள் தெரிந்துகொள்ள முடியவில்லை. எதிர்பாராத இந்த திடீர் நிகழ்வுகள் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

லேண்டர் தரையிறங்குவதை பார்க்க பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்திருந்தார். இந்நிலையில், இன்று காலை அங்கிருந்து அவர் புறப்பட்டுச் செல்லும் போது, இஸ்ரோ தலைவர் கே.சிவன் கண் கலங்கினார். சிவனை கட்டியணைத்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். அப்போது, பிரதமரும் சிறிது கண் கலங்கினார். இப்படி நாடே சந்திராயன் -2 தோல்வியால் சோகத்தில் மூழ்கி இருக்கிறது.  

 

இந்நிலையில் எழுத்தாளரும், திமுக ஆதரவாளருமான வே,மதிமாறன், தனது ட்விட்டர் பதிவில், ‘’3 ஆம் வீட்டில் இருக்கும் சந்திரன் 4 ஆம் வீட்டிற்கு நகருகும் போது, சந்திரனில் லேண்டாக, ராக்கெட்ட 3 ஆம் வீட்டிற்குள் விட்டால் எப்படிங்க? எனக் கிண்டலடித்துள்ளார். இதற்கு பலரும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.