நம்மை வைத்தே நம்மைக் கேலி செய்யும் பார்ப்பனச் சங்கிகளின் சூழ்ச்சிக்குப் பலி ஆகலாமா? திமுக எதிர்ப்பு தலைக்கேறி பாஜகவின் ஊதுகுழலாக மாறிப்போகலாமா? என திமுக ஆதரவாளரும், எழுத்தாளருமான டான் அசோகன் கொதித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், ‘’நாலைந்து பார்ப்பனர்கள் திமுக தலைவர் ஸ்டாலினைக் குறிப்பிடும்போது கிண்டல் செய்ய 'சுடலை' என எழுதினார்கள். அதை இப்போது திமுக ஒவ்வாமை கொண்ட, திராவிட இயக்க ஒவ்வாமை கொண்ட பிற பார்ப்பனரல்லாத இளைஞர்களும் பயன்படுத்துவதைப் பார்க்கிறேன். நிற்க.

சுடலை என்பது தமிழர்களின் தெய்வங்களில் ஒன்று. அய்யனார், மதுரைவீரன் போல பார்ப்பனர்களால் 'சிறு'தெய்வமாக்கப்பட்ட தமிழர்களின் தெய்வங்களில் சுடலைமாடனுக்கு முக்கிய இடமுண்டு. அதை கேலியும் கிண்டலும் செய்ய பார்ப்பான் பயன்படுத்துகிறான் என்றால் அவனுக்கு அது பிடிக்காத விஷயம். நம் கீழடி வரலாற்றில் இருந்து, பெரியாரில் இருந்து, திருக்குறள்-திருவள்ளுவர் வரை அவனுக்கு ஒவ்வாமை தரும் விஷயங்கள். அதனால் அவன் அதை கேலிசெய்ய பயன்படுத்துகிறான். 

பெரியார் சிலையில் இருந்து திருவள்ளுவர் சிலை வரை சாணி அடிக்கிறான். ஆனால் இதே பார்ப்பான் யாரையாவது பெருமாளு என்றோ, அத்திவரதா என்றோ கேலி செய்வானா? மாட்டவே மாட்டான். நாம் இதை கொஞ்சமாவது சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? நமக்குச் சுயமரியாதை வேண்டாமா? திமுகவோ திமுக தலைவர்களோ விமர்சனங்களுக்கோ, கேலிகளுக்கோ அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஆனால், நம்மை வைத்தே நம்மைக் கேலி செய்யும் பார்ப்பனச் சங்கிகளின் சூழ்ச்சிக்குப் பலி ஆகலாமா? திமுக எதிர்ப்பு தலைக்கேறி பாஜகவின் ஊதுகுழலாக மாறிப்போகலாமா?’’ எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.