Asianet News TamilAsianet News Tamil

பாஜகவில் சேர்ந்துடுங்க... அழகிரிக்கு ஐடியா கொடுத்து அலறவிட்ட திமுக தொண்டரின் அசத்தலான பதிவு...

DMK Supporter facebook post against MK Azhagiri
DMK Supporter facebook post against MK Azhagiri
Author
First Published Dec 29, 2017, 4:37 PM IST


தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு அழகிரி இன்று அளித்த தொலைபேசிப் பேட்டியில் கூறுகையில், ''ஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும்வரை திமுக எந்தத் தேர்தலிலும் வெற்றிபெறாது. ஸ்டாலினுடன் இருப்பவர்களின் செயல்பாடுகள் சரியில்லை. துரோகம் செய்தவர்களுக்கு பதவி கொடுப்பதை நிறுத்தினால் மட்டுமே திமுக முன்னேறும். அதேபோல கருப்பு சட்டையும் துண்டும் பலனிக்காதென மதிமுக கூட்டணியில் இடம் பெற்றது குறித்தும் மு.க.அழகிரி கூறியிருகிறார்.

ஏற்கனவே தோல்வியில் இருக்கும் நேரத்தில் ஆறுதல் என்ற பெயரில்,  இப்படி தீயில்மேலும் தீயை அள்ளி வீசி அணைக்க முயலாதே.. மௌலானா ரூமி சொன்ன கருத்தை சுட்டி காட்டி முகநூலில் பதிவிட்டு அழகிரியை அதிரவைத்துள்ளார் திமுக தொண்டர்.

எல்லா மருமகன்களும் மாறன் ஆக முடியாது.. என்கிறார் தோழி Shanmugaa Pandian ஆம்.. ஆக முடியாதுதான்.. ஆனால் எல்லாரும் தளபதியாக முடியாது என்பதை மறந்து போகிறார்.. கலைஞரின் மூத்த மகன் மு க.முத்து அதிமுகவிற்காக பிரச்சாரம் செய்தவர்.. ஏன் ஜெயலலிதாவிற்காகவும் பிரச்சாரம் செய்தார்..
இங்கே உறவுகள் தீர்மானிப்பதில்லை திமுகவின் வளர்ச்சிக்கு யார் வேண்டுமென்பதை மாறாக உழைப்பும் .. மக்களின் ஆதரவும் தீர்மானிக்கிறது..
..
அழகிரி கருப்பு சட்டையும் துண்டும் பலனிக்காதென்கிறார்.. அவர் நேரடியாக பாஜகவில் சேர்ந்துகொண்டு எம்மை எதிர்க்கலாம்.. பெரியாரை தொடராத எந்த நிலைபாடும் இங்கே வெற்றிபெறமுடியாது.. பதவிக்காக கொள்கையை விட்டுகொடுக்க வேண்டுமென்பது பணத்திற்காக எதையோ செய்வதைபோல.. இதெல்லாம் அழகிரிக்கு தெரிய வாய்ப்பில்லை.. திமுக ஆட்சியின் போது வெற்றியை பெற்று தருவதில் வியப்பொன்றுமில்லை.. ஆனால் தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் செய்து பிரமாண்டமான எதிர்க்கட்சியாக தனியொருவராக நிறுத்தியிருக்கிறார்.. தளபதி.ஸ்டாலின்.. கலைஞரின் ஆலோசனைப்படி நடந்து மிகப்பெரிய சவாலாக நிற்பதை பொறுக்கமுடியாத ஊடகங்கள் ..திமுகவை தொடர்ந்து தாக்கும் பாசிச சக்திகள் அழகிரியை மீண்டும் கொம்பு சீவி பார்க்கிறது.. இதோ சிலர் கனிமொழியை முன்னெடுக்க வேண்டுமென மொழிகிறார்கள் பாவம் இதற்கு முன்பே தர்மாம்பாள்..நாடார் சமூக இயக்கங்களை நாடி சென்னை முழுவதும் சுவரொட்டி அடித்து கடைசியில் ..சொல்லமுடியாமல் ஒதுங்கிய கதை தெரியாதென்று நினைக்கிறேன்.. கனிமொழியே மகளிர் அணி தலைவி பதவியை விட்டுகொடுப்பதாக இல்லையென்று சொன்னபிறகும்.சில அரைவேக்காடுகள் விளசுகின்றன..
..
மாறனை துணைக்கழைத்து கதைப்போருக்கு 
மாறனை கலைஞர் தன் மனசாட்சியென்று சொன்னது கழகத்தில் நேரடியாக சில விடயங்களை சொல்ல முடியாதபோது .. அதனால் சிலர் பிணங்குவார்களென்று அறிந்து மாறனை வைத்து காய் நகர்த்துவார்.. ஆனால் இங்கே நேரடியாக தளபதி மருமகன் கழக நிகழ்வுகளிலோ .. மாறனை போல தேர்தல் அரசியலிலோ.. உட்கட்சி நிகழ்வுகளிலோ கலந்துகொள்வதில்லை தளபதிக்கு உதவிக்காக அருகில் வைத்திருக்கலாம் .. நேரடியாக தலையீடு வரும் போது எதிர்ப்போம்.. அதுவரை பொத்திக்கொண்டிருங்கள்..
..
இங்கே ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும்.. மாறனின் சில முடிவுகள் இயக்கத்தில் வரலாற்றுப்பிழையாகி இருக்கிறது.. பாஜகவோடு கூட்டு சேராமல் அப்போது தமாகா வை சேர்த்திருந்தால் ஜெயலலிதா மீண்டும் வந்திருக்கமுடியாது.. அது திராவிட அரசியலில் திமுக மீதான விமர்சனபார்வையை .. தொடர்ந்து ஆதரவு தந்த திராவிட சிந்தனையாளர்களை .. தொடர்ந்து வந்த வாக்குகளை இல்லாதாக்கியது 
அதனால் மாறனின் செயல்பாடும் விமர்சனத்திற்குள்ளாகியதுதான்..
..
ஒரு தோல்வி நாகரீகமான விமர்சனத்தை தாண்டி தனிமனித வன்மத்தை .. கட்சிக்குள் பிரிவினை அரசியலை.. உண்டாக்கியிருக்கிறது.. விரைந்து நடவடிக்கை எடுத்து கட்டம்கட்ட வேண்டும் இது போன்ற விசம பிரச்சாரத்திற்கு பின்னில் உள்ள சாதிய பின்புலங்களை..கோஷ்டி மனப்பான்மையை தலைமைக்கெதிராக போக்கை முன்னெடுப்போரை விலக்கிவைத்து .. கூட இருந்தே குழிப்பறிப்போரை இனங்கண்டு கலையவேண்டும்..
..
தளபதி மட்டுமே சரியான தேர்வு .. அவரை ஏற்காதவர்கள் யாராகினும்.. அண்ணனாகினும் தங்கையாகினும்.. கால் தூசிக்கு சமமென கருதி விட்டொழிப்போம்..
ஒன்றிணைவோம் தளபதியோடு.. இப்படி தனது பதிவில் கூறியிருக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios