Asianet News TamilAsianet News Tamil

பாஜகவுக்கு திமுக ஆதரவு..? எடப்பாடி ஆட்சியை கவிழ்க்க மு.க.ஸ்டாலின் வியூகம்..!

டெல்லியில் நடைபெற்று வரும் 21 எதிர்கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்திற்கு கூட செல்லாமல் கனிமொழியை மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.

DMK support for BJP MK Stalin's strategy to topple Edappadi regime
Author
Tamil Nadu, First Published May 21, 2019, 2:32 PM IST

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை பல்வேறு கட்சிகளும், அரசியல் பார்வையாளர்களும் விமர்சித்து வருகின்றனர். மோடி அலை வீசிய போது கூட 270 சீட்டு கிடைக்கும் என்று தான் கூறினர்.அதுமட்டுமில்லாமல் அப்போது காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தியும் இருந்தது. ஆனால் தற்போது பாஜக ஆட்சி மீது மக்கள் மிகுந்த அதிருப்தியோடு உள்ளனர். மேலும் மாநில கட்சிகள் இந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்கள் பெரும் என்று வந்துள்ளது. குறிப்பாக தென்னிந்தியாவில் பாஜகவுக்கு போதிய வரவேற்பு இல்லை. அப்படி இருக்க கருத்துக்கணிப்பில் 300க்கும் மேற்பட்ட சீட் கிடைக்கும் என்று கருத்துக்கணிப்பில் வந்தது பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

 DMK support for BJP MK Stalin's strategy to topple Edappadi regime

பாஜகவுக்கு உளவுத்துறை ரிப்போர்ட்டின் படி தொங்கு பாராளுமன்றம் அமையும் என்று பாஜக தலைமைக்கு சென்றுள்ளதால் சில மாநில கட்சிகளின் ஆதரவை பெற பாஜக தலைமை முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இந்த நிலையில் திமுகவின் நிலைப்பாட்டை அறிய பாஜக கட்சி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். ஒரு வேளை திமுக ஆதரவு தேவைப்பட்டால் அதிமுக கட்சியை கழட்டிவிட்டு திமுகவின் ஆதரவை பாஜக கேட்க தயங்காது என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

 DMK support for BJP MK Stalin's strategy to topple Edappadi regime

இதனிடையே நேற்று செய்தியாளர் சந்திப்பில் மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் அதில் திமுக அங்கம் வகிக்குமா? என செய்தியாளர் எழுப்பினர். அதற்கு பதில் அளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு அதற்குரிய விளக்கத்தை அளிக்கிறேன் என கூறினார். இதனால் பாஜக தேர்தல் முடிவுக்கு பிறகு ஒரு சில நிபந்தனைகளுடன் திமுகவை அணுகி ஆதரவை கேட்கும் என்று அரசியால் வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.  காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பால் மு.க.ஸ்டாலினிடம் மாற்றம் தெரிவதாகவும் கூறப்படுகிறது.DMK support for BJP MK Stalin's strategy to topple Edappadi regime 

டெல்லியில் நடைபெற்று வரும் 21 எதிர்கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்திற்கு கூட செல்லாமல் கனிமொழியை மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார். காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போனால், பாஜகவுக்கு ஸ்டாலின் ஆதரவு கொடுத்து தமிழகத்திலும் ஆட்சியை பிடித்து விட வாய்ப்பிருப்பதால் அவர் பாஜக ஆதரவு நிலையை அவர் எடுப்பதில் சந்தேகம் இல்லை என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios