டி.டி.வி.தினகரன் குடும்பத்தை மு.க.ஸ்டாலின் நாறடிக்க, ஸ்டாலினின் தலைமுறைக்கே வசம்பு தடவி விட்டார் டி.டி.வி.தினகரன். இருவரும் விமர்சித்துக் கொள்ளாமல் இருந்து வந்த நிலையில் அவர்களது மோதல் தெருவுக்கு வந்திருக்கிறது. இந்த நிலையில்தான் மு.க.ஸ்டாலின் ஒரு அதிரடி முடிவை எடுத்திருக்கிறாராம். 

திருவாரூா் இடைத்தோ்தலை எதிர்கொள்ள முடியாமல் தேர்தலை நிறுத்த தி.மு.கவும் ஒரு காரணமாகி விட்டது என டிடிவி.தினகரன் தீண்ட, கொதித்துப்போன திமுக தரப்பு சிபிஐ, வழக்கு, ஃபெரா வழக்கு, சின்னம் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்த வழக்கு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் டி.டி.வி.தினகரந்தான்  தான் அச்சப்பட வேண்டும்.

 

டிடிவி தினகரன் நோ்த்திக்கடன் செலுத்தப்போவது போல வாராவாரம் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து வருகிறார். ஆா்.கே.நகா் தொகுதியில் அவா் எப்படி வெற்றி பெற்றார் என்று அனைவருக்கும் தெரியும். தற்போதும் கூட அவரை ஆா்.கே.நகா் மக்கள் 20 ரூபாய் தினகரன் என்று தான் அழைக்கின்றனா். அப்படிப்பட்ட நபா் தி.மு.க.வை அச்சப்படுவதாக கூறுவது நகைப்புக்குரியது என திரிகிள்ளிப்போட்டார் மு.க.ஸ்டாலின். அத்தோடு விட்டதா திமுக? நேற்று வெளியான முரசொலி நாளிதழில், 20.. 120.. 420.. என்ற தலைப்பில், ’மானத்தைப் பற்றிக் கவலைப்படும் ஆயிரம் பேருடன் கூட விவாதிக்கலாம். மானத்தைப் பற்றிக் கவலைப்படாத ஒரே ஒரு ஆளுடன் கூட விவாதிக்க முடியாது என்றார் அறிவுலக ஆசான் தந்தை பெரியார். இதில் டிடிவி. தினகரன் இரண்டாவது ரகம்’ என்று  டிடிவி தினகரனை கடுமையாக விமர்சித்து கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தன் ட்விட்டர் பக்கத்தில் “ கட்சியை, மக்களைக் காக்க பொதுத்தொண்டுக்கு வந்திருக்கிறேன் என்று எவனாவது சொன்னால் நம்பாதே, அவனது இன்றைய நிலையை ஆராய்ந்து பார், அவன் தியாகியா அல்லது தகுதியைத்தாண்டிய செல்வந்தனா என்பது புரியும். அதிலும் தன் குடும்பம்,பிள்ளைகள் என்று வந்துவிட்டால் அவன் சுயநலப் புலிதான் என்றார் பெரியார். 

திருவாரூரில் இருந்து திருட்டு ரயிலேறி சென்னை வந்த பாரம்பரியத்திலிருந்து வந்து, இன்றைக்கு ஆசியப் பெரும் பணக்காரர்களில் ஒருவராக வலம் வரும் ஸ்டாலின் தான் அந்த சுயநலப் புலி! லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பால் உருவான பல நூறு கோடி மதிப்புள்ள முரசொலி அறக்கட்டளைக்கு தனது மகனை அறங்காவலராக நியமித்த யோக்கியர் ஸ்டாலினைப் பற்றித்தான் 55 ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் இப்படிச் சொன்னார் போலும். லட்சம் கோடி மதிப்பிலான 2ஜி ஊழல் வழக்கில் தனது தங்கையை, தாயை சிறைக்கும் விசாரணைக்கும் அனுப்பி வைத்த இந்த சுயநலப்புலிதான் இன்று மற்றவர்களின் தரம் பற்றி பேசுகிறது’’ என்றெல்லாம் கடுமையாக பதிலுக்கு சாடினார் டி.டி.வி.தினகரன். 

இது திமுக தரப்பை கடுங்கோபம் கொள்ளத் செய்திருக்கிறது. இதனால், திருவாரூர் தேர்தலில் நமக்கு அடிகொடுக்க வேண்டும் எனச் சொன்ன டி.டி.வி.தினகரனை இனி எழவிடவே கூடாது என ஆட்டம் காட்டத் தயாராகி விட்டார் ஸ்டாலின். அமமுகவில் இருந்த செந்தில் பாலாஜியை வளைத்தது போல் டி.டி.வி.தினகரன் அணியில் இருக்கும் மொத்த பேரையும் ஸ்கெட்ச் போட்டு தூக்க வேண்டும் என திமுகவின் முக்கிய நிர்வாகிகளிடம் அசைண்மெண்டை ஒப்படைத்திருக்கிறாராம் ஸ்டாலின். டி.டி.வி அணியில் உள்ள தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களை இந்த முறை கொத்தாக தூக்கி வர திட்டமிட்டு இருகிறாராம்.

தேர்தலில் சீட் அல்லது கட்சிப் பதவி, எதிர்பார்க்காத அளவிற்கு பணம் எனச் சொல்லி ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். அமமுகவில் தினகரனைத் தவிர வேறு யாரும் இருக்கக் கூடாது. நம்பக்கம் வருவதற்கு என்ன கேட்டாலும் கொடுங்கள்' என உத்தரவிட்டிருக்கிறாராம் ஸ்டாலின். அடுத்து வரும் இடைத்தேர்தல் அறிவிப்புக்குள் அமமுகவிலிருந்து அனைவரையும் அலேக்காக தூக்கி வந்து டி.டி.வி.தினகரனை திணறடிக்க வேண்டும் என்பதுதான் திமுகவின் அதிரடி டார்கெட்!