அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்

முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மு.க.ஸ்டாலின் உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடியில் அசுரன் படத்தை பார்த்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘அசுரன் படம் மட்டுமல்ல பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும், சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன். கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றி மாறனுக்கும், வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷுக்கும் பாராட்டுகள்’ எனத் தெரிவித்து இருந்தார். 

இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், ‘’பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல... பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - ஆஹா.... அற்புதம்... அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…

அவரது கருத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் பலரும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். 

Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…