திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமி நீக்கப்பட்டு அவருக்குப்ப பதிலாக அந்தியூர் செல்வராஜை திமுக துணை பொதுச்செயலாளராக நியமித்தார் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். 

திமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான வி.பி.துரைசாமி. திடீரென தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்ததால் அவர் பாஜகவில் இணைய உள்ளார் எனக் கூறப்பட்டது. இதுகுறித்து அவர் ’’தமிழக பாஜக தலைவர் முருகனும், நானும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். அந்த வகையில் அவருக்கு வாழ்த்து சொல்லத்தான் சந்தித்தேன். இது அரசியல் ரீதியிலான சந்திப்பே இல்லை. முருகன் என்னுடைய சொந்தக்காரர். பிராமணர் கட்சியில் அருந்ததியருக்கு தலைவர் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை வாழ்த்தப்போனால் என்ன தவறு?


இப்போதைக்கு நான் அமைதியாக இருக்கப்போகிறேன். என் மீது ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், கட்சியின் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன். நான் மாற்று முகாமுக்கு செல்லவில்லை. அவர்களுடைய நடவடிக்கைகளைப் பொறுத்துதான் என்னுடைய முடிவு இருக்கும். நான் யதார்த்தமாகத்தான் போய் சந்தித்தேன். ஆனால், ஸ்டாலின் அருகில் உள்ள அரசியல் விற்பன்னர்கள் அவரிடம் என்ன சொல்கிறார்களோ, அதன்படி அவர் நடப்பார்.

ஸ்டாலின் அவர் தனிப்பட்ட முறையில் நல்லவர். என் மீது மரியாதை, அன்பு, பாசம் உள்ளவர்தான் தலைவர். அதெல்லாம் மறுப்பதற்கில்லை. அதேபோல என் மீது ஏதேனும் ஒரு குற்றச்சாட்டு வந்தது உண்டா? நாமக்கல் மாவட்டத்தில் திடீரென்று ஒருவரை நீக்குவார். இன்னொருவரைப் போடுவார்; இவரை மாற்றலாமா என்றுகூட ஒரு வார்த்தை கேட்க மாட்டார்’’ என தனது விரக்தியை வெளிப்படுத்தி  இருந்தார். இந்நிலையில் எதிர்பார்த்தது போலவே திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமி நீக்கப்பட்டு அவருக்குப்ப பதிலாக அந்தியூர் செல்வராஜை திமுக துணை பொதுச்செயலாளராக நியமித்தார் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். 

இதுகுறித்து வி.பி.துரைசாமி கூறுகையில், ‘’ எனது பதவியை பறித்தது எதிர்பார்த்த ஒன்று தான். இதில் ஆச்சர்யம் எதுவுமில்லை. 3 நாட்களில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கூறுவேன். திமுகவில் தொடர்ந்து இருப்பேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.