இந்தியாவின் மிக முக்கியமான அரசியல் கன்சல்டன்ட்டான பிரஷாந்த் கிஷோர் தி.மு.க.வோடு ஒப்பந்தம் போட இருக்கிறார்! என்று ஒரு தகவல் காற்றில் மிதந்தது. உண்மையா? அல்லது வெறும் வதந்திதானா! என்று சந்தேகிக்கப்பட்ட இந்த தகவல், இதோ உறுதியே ஆகிவிட்டது. ஸ்டாலினுடன், பிரஷாந்தின் முக்கிய நிர்வாகிகள் அமர்ந்து பக்காவாக ஸ்கெட்ச் போட்டுவிட்டனர் ப்ராஜெக்ட் பற்றி. 

சரி! சுமார் ஒன்றரை வருடம் செயல்பட்டு, தி.மு.க.வுக்காக பல பணிகளை செய்து, ஸ்டாலினை முதல்வராக்க போகும் பிரஷாந்துக்கு ஃபீஸ் என்ன தெரியுமா? ஜஸ்ட் இருநூறு கோடி ரூபாய்தான். இதற்கும் தி.மு.க. சம்மதித்துவிட்டது. (பின்னே ஆட்சியில் கையில் வந்தால், இருநூறு கோடியெல்லாம் இஞ்சி மொரப்பா வித்து கிடைக்கிற காசுதானே ஏட்டா!)

’இம்பூட்டு செலவு பண்ணி இவரை புக் பண்ணனுமா? தலைவர் கலைஞரெல்லாம் இப்படி செலவு பண்ணியா ஆட்சியை பிடிச்சார்! காசு செலவு பண்ணுஇ பிரஷாந்தை நம்புறதை விட, பப்ளிக்கோட அபிமானத்தை பெறலாமே! அது கொடுக்குமே வெற்றியும், பதவியும்.’ என்று சீனியர் தலைவர்கள் புலம்பினர்.

ஆனால் இதை மறுத்துப் பேசும், தி.மு.க.வின் மாநில நிர்வாகிகளான இளைஞர்களோ ”எந்த காலத்துல இருக்கீங்கண்ணே, பிரஷாந்த் கிஷோர் கூட நம்ம தளபதி  ஒப்பந்தம்போட்டு, கட்சியின் கஜானாவை காலி பண்ணப் போறார்னு நினைக்கிறீங்களா?

அவரு கட்சியோட கஜானாவை நிரப்பப்போறார். அதாவது பிரஷாந்த் கிஷார் எந்த கட்சியோடு ஒப்பந்தம் போட்டாலும், அக்கட்சிக்கு நிதியை கொண்டு வந்து கொட்டுவார். எப்படி?ன்னா, தன் பாக்கெட்டில் இருக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழிலதிபர்களிடமிருந்து  மில்லியன் கணக்கில் வாங்கிக் கொடுப்பார். அதை வைத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட கட்சி, பிரஷாந்த் சொல்லும் வகையிலெல்லாம் ஒர்க் அவு பண்ணும். இதன் மூலம் வெற்றி வாய்ப்பு சாத்தியப்படும். ஜெயித்து ஆட்சியில் அமர்ந்ததும், பிரஷாந்த் யார் யாரிடமிருந்து பணம் வாங்கிக் கொடுத்தாரோ அந்த தொழிலதிபர்கள்  அந்த மாநிலத்தில் தொழில் துவங்கிட ஏகபோக அனுமதி, மிகப்பெரும் காண்ட்ராக்ட்டுகளை  பெறுவதுன்னு கொழிக்க ஆரம்பிப்பாங்க. 

அதாவது ஒரு ரூபாயை கொடுத்துட்டு, ஐந்து வருஷத்துல சுமார் நூறு ரூபாய்க்கும் மேலே பிரதிபலன் அடைஞ்சுடுவாங்க. ஆக  கட்சிக்கு ஆட்சியும், காசு கொடுத்த தொழிலதிபருக்கும் காண்ட்ராக்ட்டும்ன்னு தெளிவா டபுள் சைடும் கோல் போட்டுடுவார் பிரஷாந்த். ரெண்டு பக்கமும் இருந்தும் சர்வீஸ் சார்ஜை வாங்கி, ஜோப்புல போட்டுப்பார். 

அந்த வகையில் நம்ம கட்சியோடு இப்ப அவர் ஒப்பந்தம் போட்டிருக்கிறதாலே நம்ம கழகத்துக்கும் உள்நாடு, வெளிநாடுன்னு சர்வதேசங்களில் இருந்தும் மில்லியன் கணக்கில் பணம் வந்து கொட்டப்போவுது.” என்று  விளக்கியுள்ளனர். 

ஆக! ஏற்கனவே தேசிய அளவில் மிகப்பெரும் பணக்கார கட்சியாக இருக்கும் தி.மு.க.வுக்கு இன்னும் பணம் வந்து கொட்டோ கொட்டுன்னு கொட்டப்போவுது!