Asianet News TamilAsianet News Tamil

திமுக எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனுக்கு கொரோனா..! மருத்துவமனைக்கு சென்றும் அடங்காத அரசியல்

திமுகவை சேர்ந்தவரும் எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
 

dmk speaker and writer manushyaputhiran tests positive for corona
Author
Chennai, First Published Jul 16, 2020, 9:21 PM IST

கொரோனா வைரஸ் சாமானியர்கள் முதல் சர்வதேச தலைவர்கள் வரை பாரபட்சமின்றி தொற்றிவருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 1,56,369 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 

தமிழ்நாடு அரசின் சீரிய நடவடிக்கைகளால், சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. குணமடைந்தோர் விகிதமும் அதிகமாகவுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் முக்கால்வாசி பேர் குணமடைந்துவிட்டனர். தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் சிகிச்சைகளும் சிறப்பாக இருப்பதால் தான், பாதிப்பு தாறுமாறாக அதிகரிக்காமல் இருப்பதுடன், அதிகமானோர் குணமடைந்தும் வருகின்றனர். 

dmk speaker and writer manushyaputhiran tests positive for corona

ஆனால் எதிர்க்கட்சியான திமுக, ஆளும் அதிமுக அரசின் மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகிறது. அந்தவகையில், திமுக பேச்சாளரும் எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சூழலிலும், அதிமுக அரசை விமர்சிப்பதை நிறுத்தவில்லை. 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள மனுஷ்யபுத்திரன், ஒரு வருத்தமான செய்தி. எனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். எவ்வளவோ கவனமாக இருந்தும் எப்படி வந்தது என்று தெரியவில்லை. நான்கு நாட்களாக தொடர் காய்ச்சல். சந்தேகப்பட்டு பரிசோதனை செய்துகொண்டதில் பாசிட்டிவ் என்று வந்துவிட்டது. சமீபத்தில்தான் இருதய அறுவை சிகிட்சை செய்திருப்பதால் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பது அவசியம் என என் மருத்துவர்கள் அறிவுறுத்தியதன்பேரில் அட்மிட் ஆகியிருக்கிறேன்

dmk speaker and writer manushyaputhiran tests positive for corona

இந்த நான்கு மாதத்தில் கொரோனா பற்றி எவ்வளவோ எழுதிவிட்டேன். ஊடகங்களில் எவ்வளவோ பேசிவிட்டேன். இப்போது நானே அதன் நேரடி சாட்சியமாகவும் ஆகியிருக்கிறேன்.

கொரோனா வார்டின் முதல் நாள் அனுபவமே வெகுசிறப்பாக உள்ளது. பாத்ரூமில் வீல்சேர் நுழையவில்லை. ' இப்படி ஒரு பிரச்சினையை இப்போதுதான் எதிர்கொள்கிறோம்' என்கிறார்கள். ஒரு தலையணை கேட்டு ஐந்து மணி நேரத்திற்குப்பிறகு இப்போதுதான் கிடைத்தது. ஒரு பேய் பங்களாவின் பேரமைதி. இவ்வளவு வசதியின்மைக்கு நடுவே என்னை நானே கவனித்துக்கொள்ளவேண்டும். கொரோனாவைவிட அதுதான் கொடுமையாக இருக்கிறது. பத்திரமாக இருங்கள். இந்த முறையும் மீண்டு வந்துவிடுவேன் என்றுதான் நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios