2ஜி ஊழல் வழக்கில் தனது தங்கையை, தாயை சிறைக்கும் விசாரணைக்கும் அனுப்பி வைத்த இந்த சுயநல புலியென்றும் , முரசொலி அறக்கட்டளைக்கு தனது மகனை அறங்காவலராக நியமித்த யோக்கியர் ஸ்டாலினைப் பற்றித்தான் 55 ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் இப்படிச் சொன்னார் போலும் என தாறுமாறாக திட்டி ட்வீட் போட்டிருந்தார் தினகரன் இதன் உச்சகட்டமாக, திருவாரூரில் இருந்து திருட்டு ரயிலேறி சென்னை வந்த பாரம்பரியத்திலிருந்து வந்த சுயநலப்புலி என கிழித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக  தினகரனின் குடும்பத்தினரையும், அவர் அரசியலுக்கு எப்படி வந்தார் என திமுக தொண்டர்கள் தாறுமாறாக கலாய்த்து தள்ளியிருக்கிறார்.

அதில், உலகத்திலையே ஜெயில்ல இருக்கும் ஒரு ஊழல் குற்றவாளி கிட்ட ஆலோசனை கேட்டு கட்சி நடத்தும்  தினகரன் அவர்களே நீங்களெல்லாம் தளபதியை பற்றி பேச தகுதியே கிடையாது எனது தொடங்கும் இந்த அர்ச்சனை,   1999ல் அவர் பெரியகுளம் நாடாளுமன்றத்தில் வென்றபோதுதான் அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் சிக்கினார். 'நான் தான் இந்தியக் குடிமகனே இல்லையே, சிங்கப்பூர் குடிமகன் ஆச்சே' என்று ஹவாலா வுக்கே அல்வா கொடுக்க முயற்சித்தார். அமலாக்கத்துறை 31 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. அது பின்னர் 28 கோடியாகக் குறைக்கப்பட்டது.

கொள்ளை வழக்கில், சின்னம்மா சிறையில், அத்தை  சிறையில், தம்பி சிறையில், தங்கச்சி கணவர் பிணையில் 28 கோடி ரூபாய் கட்டிட்டும் நீங்களும் பிணையில் இப்படியிருக்கும் உங்கள் குடும்பத்திற்கு தான் பெரியார் சொன்னது.

அதுமட்டுமா? கொள்ளையைப் பங்குபோடும் அதிகார யுத்தத்தில் இரட்டை இலையைப் பெற தேர்தல் அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதாகி டெல்லி சிறையில் இருந்து வெளியில் வந்தவர் Accused தினகரன்.120 பி குற்றச்சதி, IPC 201 ஆதாரங்களை அழித்தல், 
ஊழல் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யலாம் என்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் சொன்னது.

14 வயதில் இந்தி எதிர்ப்பு கொடிபிடித்து, 28 வயதில் கதை வசனம் மூலம் லட்சம் லட்சமாக சம்பாதித்து, 33 வயதில் சொந்த வீடு வாங்கி, தன் உழைப்பில் சொந்தக்காரும் வாங்கி, பிறகு எம்எல்ஏ, அமைச்சர், முதல்வர் என்று ஆகி தமிழின தலைவராக இன்று அண்ணாவின் பக்கத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் தம்பியின் பாசறையில் வந்தவர்களான எங்களுக்கு எத்தனை இருக்கும்?

முறைகேடாகச் சம்பாதித்த பணத்தை நமது எம்.ஜி.ஆர். நாளிதழ், ஜெயா பப்ளிகேஷன் வங்கிக் கணக்குகளில் கோடிகளாகச் சேர்த்து, 
அங்கிருந்து பினாமி நிறுவனங்களில் பங்கிட்டார்கள் என்பதை சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி குன்ஹா குறிப்பிட்டு இருப்பார். அதில் ஜெயலலிதா, சசிகலா மட்டுமல்ல; Accused தினகரனும் பங்குதாரர்தான் என்றும் குன்ஹா குறிப்பிட்டு இருப்பார்

அயல் நாட்டில் சொத்துவாங்கி அந்நிய செலவாணி மோசடி வழக்கில் 27"கோடி கட்டி ஜாமினில் வெளிவந்து. ஊழல் வழக்கில் உள்ளபோன சித்திய தியாகத்தலைவினு சொல்லி, அரசியலுக்கு வந்து,ஊரை அடித்து உலையில் போட்டு, மாபியா பணத்தில் சாதி சங்கம் நடத்திவரும் உமக்கே இத்தனை எகத்தாளம் வாய்ச்சவடால் திமிர்,ஆணவம் இருந்தால்? எங்க தளபதியை இப்படி நீங்கள் விமர்சிப்பீர்கள்? 

இங்கிலாந்து 'பார்கேல' வங்கியில் ஒரு கோடியே 4 லட்சத்து 93 ரூபாய் அமெரிக்க டாலரையும், 44 லட்சம் இங்கிலாந்து பவுண்டுகளையும் டிப்பர் இன்வெஸ்மெண்ட் நிறுவனத்தின் பெயரில் சட்ட விரோதமாக முதலீடு செய்ததாகவும் - ஐரோப்பிய வங்கிகளில் ஹாப்ஸேகரப்ட் ஹோட்டல் தொடங்க டிப்பர் இன்வெஸ்மெண்ட், டெண்டி இன்வெஸ்மெண்ட், பேனியன் ட்ரீ ஆகிய மூன்று நிறுவனங்களின் பேரில் 'பார்கேல' வங்கியில் 36.36 லட்சம் அமெரிக்க டாலர் மற்றும் 1 லட்சம் பவுண்டுகளை முதலீடு செய்ததாகவும், உங்கள் மீது 21 ஆண்டுகளாக எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. வழக்கை எதிர் கொள்ளாமல் விசாரணைக்கு தடை விதிக்கக் கேட்டு வழக்கு தாக்கல் செய்த மிஸ்டர் பெரா அக்யூஸ்ட் அவர்களே நீங்கள் காந்தி மாதிரி பேசினா எப்படி? இப்படியா ஒட்டுமொத்த குடும்பத்தையே தோண்டியெடுத்து வெச்சு செய்கின்றனர் திமுக இணையதள வாசிகள்.