ராமதாஸின் அறிக்கைக்கு பதிலடி கொடுக்க வழக்கமாக துரைமுருகன் தான் அறிக்கை வெளியிடுவார் என நினைத்த பாமகவுக்கு ஜுனியர் எஸ்.எஸ்.சிவசங்கரை வைத்து பல்ப் கொடுத்துள்ளது என திமுக ஐடி விங் சமூகவலைத்தளங்களில் வெச்சு செய்து வருகிறது.

திமுக ஆட்சியில் இருந்தபோது அரசை விமர்சித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வந்தார். அவருக்கு அப்போது முதல்வராக இருந்த கலைஞர் நேரடியாக பதிலளிக்கமாட்டார். ஏனென்றால், தனது பதிலடி வேறு விதமாகவும் ,காரசாரமாகவும் இருக்கும் அதனால் தனது சமூகத்து மக்களை தூண்டிவிட்டு கலவரம் போராட்டம் என இறங்கிவிடக்கூடாது என அலார்ட்டாக இருப்பார். அதனால், வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த துரைமுருகன் பெயரிலோ அல்லது வீரபாண்டி ஆறுமுகத்தின் பெயரிலேயோதான் ராமதாஸுக்கு பதில் அறிக்கை வெளியாகும். வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்குப் பிறகு ராமதாஸுக்கு பதிலளிக்கும் அறிக்கைகள் துரைமுருகன் மட்டுமே பதிலடி கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மணிமண்டபத் திறப்பு விழா கடந்த 17ஆம் தேதி காடுவெட்டி கிராமத்தில் நடந்தது. அதில் பேசிய டாக்டர்.ராமதாஸ், குரு வாழும் காலத்திலே அவரை இங்கே வளராமல் செய்வதற்கு, அவரை கொல்ல வேண்டும் என்று முயற்சி செய்தவர்கள் அப்போது ஆண்ட திமுகவினர். அவரை கொல்வதற்கு பல்வேறு சதித் திட்டங்களை தீட்டினார்கள். இதனை நானும் ஜி.கே.மணியும் முறியடித்தோம். இல்லை என்றால் குருவை எப்போதோ நாம் இழந்திருப்போம் என்று கூறியிருந்தார்.

ராமதாஸின் இந்த பேச்சால் திமுக தலைமையில் பயங்கர கோபமடைந்துள்ளனர். இதற்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்ட அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர், “ “திமுக ஆட்சி நடைபெற்றது 2006- 2011 ஆம் ஆண்டு. எட்டு ஆண்டுகள் கழித்து இந்தக் குற்றச்சாட்டை சொல்லும் நோக்கம் என்ன? ஆதாரம் இருந்தால் காவல்துறையில் புகார் கொடுக்கலாமே?, குருவை கொல்ல திமுகவினர் திட்டம் தீட்டியிருந்தால் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் ஏன் திமுக உடன் கூட்டணி வைத்தீர்கள் ?குருவை கொல்ல திமுகவினர் திட்டம் தீட்டியிருந்தால், குரு எப்படி திமுக கூட்டணியில் போட்டியிட முன் வந்திருப்பார்” என்று ராமதாஸுக்கு  அவர் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளார்.

முக்கியமான இந்த விவகாரத்தில் சிவசங்கரின் பெயரில் அறிக்கை வெளியானதைக் கண்ட திமுகவினர், வழக்கமாக பாமகவுக்கு பதில் தரும் அறிக்கைகள் துரைமுருகன் பெயரில்தானே வெளியாகும். ஏன் தற்போது சிவசங்கரின் பெயரில் வெளியாகியுள்ளது. என பேசிக்கொண்ட சமயத்தில், வழக்கமாக துரைமுருகனை வைத்து அறிக்கை வெளியிட்டால்,  ராமதாசுக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் பெயரில் அறிக்கை வெளியானால், தலைமையிலிருந்தே அதாவது கருணாநிதிக்கு அடுத்த  மூத்த தலைவர்கள் லிஸ்டில் இருந்த, தற்போது அவரது பெயரில் வெளியாவதை ஸ்டாலினும் விரும்பவில்லையாம் அதனாலே, மாவட்ட லெவலில் இருக்கும் மாவட்ட செயலாளர் ஒருவரை வைத்து நோஸ்கட் ஆகும் படியான அறிக்கையை விடச்சொல்லியியிருக்கிறது திமுக தலைமை 

அதன்பிறகுதான் அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவருமான எஸ்.எஸ்.சிவசங்கர்க்கு விஷயத்தை சொல்லி நெத்தியடி கேள்விகளும், நோஸ்கட் பதிலடியையும் கொடுத்து வெளியிட வைத்துள்ளது திமுக தலைமை. வழக்கமாக துரைமுருகன் தான் அறிக்கை வெளியிடுவார் என நினைத்த பாமகவுக்கு ஜுனியர் எஸ்.எஸ்.சிவசங்கரை வைத்து பல்ப் கொடுத்துள்ளது என திமுக ஐடி விங் சமூகவலைத்தளங்களில் வெச்சு செய்து வருகிறது.