Asianet News TamilAsianet News Tamil

பாஜக, பிரதமர் மோடியையும் பார்த்து திமுக பயந்து நடுங்குகிறதா? பிளாஷ்பேக்கை சொல்லி முதல்வரை அலறவிடும் டிடிவி.!

திடீர் ஞானோதயம் பெற்றிருக்கிற தி.மு.க, “பிரதமர் மோடி எங்களுக்கு எதிரி இல்லை. விருந்தினராக வருபவருக்கு கறுப்புக்கொடி காட்ட வேண்டிய அவசியமில்லை” என்று கூறியுள்ளதைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது.

DMK scared of BJP and PM Modi? ttv dhinakaran
Author
Tamil Nadu, First Published Dec 29, 2021, 3:40 PM IST

பிரதமர் தமிழகம் வந்த நேரத்தில் கறுப்புக்கொடி காட்டியதும், ‘Go Back Modi’ என்றதும்  தவறு என இதன்மூலம் இப்போது தி.மு.க ஒப்புக்கொள்கிறதா? என டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

கடந்த முறை தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு சென்னையில் மொத்தம் 29 இடங்களில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பாக கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது.  அதேபோல்,Go Back Modi என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டது. நாட்டின் பிரதமர் என்றும் பாராமல் திமுக அரசியல் உள்நோக்கத்துடன் இப்படி நடந்து கொள்கிறது என்றும் பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அப்போது திமுகவை கடுமையாக விமர்சித்தன. 

DMK scared of BJP and PM Modi? ttv dhinakaran

இந்நிலையில், பிரதமர் மோடி எங்களுக்கு எதிரியே அல்ல, இந்துத்துவா தான் எங்களுக்கு எதிரி. எனவே தமிழகம் வருகின்ற பிரதமரை நாங்கள் வரவேற்கிறோம். அவர் இப்போது எங்களுக்கு " கெஸ்ட் " எனவே அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என ஆர்.எஸ்.பாரதி கூறியிருப்பது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், எதிர்க்கட்சியாக இருந்தால் ஒன்று ; ஆளுங்கட்சியான பிறகு வேறொன்று என தி.மு.க போடும் இரட்டை வேடங்கள் அம்பலமாகி வருவதற்கு இது இன்னும் ஒரு சாட்சி என்று டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

DMK scared of BJP and PM Modi? ttv dhinakaran

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- திடீர் ஞானோதயம் பெற்றிருக்கிற தி.மு.க, “பிரதமர் மோடி எங்களுக்கு எதிரி இல்லை. விருந்தினராக வருபவருக்கு கறுப்புக்கொடி காட்ட வேண்டிய அவசியமில்லை” என்று கூறியுள்ளதைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது.

எதிர்க்கட்சியாக இருந்தால் ஒன்று ; ஆளுங்கட்சியான பிறகு வேறொன்று என தி.மு.க போடும் இரட்டை வேடங்கள் அம்பலமாகி வருவதற்கு இது இன்னும் ஒரு சாட்சி.

 

இதற்கு முன்பு பிரதமர் தமிழகம் வந்த நேரத்தில் கறுப்புக்கொடி காட்டியதும், ‘Go Back Modi’ என்றதும்  தவறு என இதன்மூலம் இப்போது தி.மு.க ஒப்புக்கொள்கிறதா? அன்றைக்கு, ‘இதெல்லாம் தேவையில்லாத வேலை’ என்று  சொன்ன எங்களைப் போன்றவர்களைப் பார்த்து பா.ஜ.க.வைக் கண்டு பயப்படுகிறார்கள்’என்று தி.மு.க.வினரும் அவர்களைச் சார்ந்தவர்களும் விமர்சித்தார்கள். அப்படியென்றால், இப்போது பா.ஜ.க.வையும், பிரதமர் மோடியையும் பார்த்து தி.மு.க பயந்து நடுங்குகிறது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios