சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 40 ஆண்டு காலத் திமுக பேச்சாளரும் கருணாநிதிக்காக தீக்குளித்த சாமிதான் திமுகவில் இருந்து விலகி கழக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். 

இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுவாமிநாதன்;- நான் எதிர்க்கட்சி பேச்சாளராக இருந்தாலும், இந்த கொரோனா சமயத்தில் தமிழக அரசின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்தது. அனைத்து மக்களுக்கும் அரசு சார்பில் நிவாரண உதவி வழங்கியது மட்டுமில்லாமல் அவர்கள் கட்சி சார்பிலும் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு காலங்களில் ஏழை எளிய மக்களுக்கு வீடு வீடாக சென்று நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.

சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் செந்தில் நாதன், அமைச்சர் ஜி.பாஸ்கரன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினருமான நாகராஜன் ஆகியோர் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். எனது சட்டமன்ற தொகுதியான திருப்பத்தூரில் மருது அழகுராஜ் சுமார் 25 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு 5 கிலோ அரிசி, மளிகை சாமான்கள் ஆகியவை தொகுப்பினை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளையும், மக்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களும் மற்றும் மக்கள் அன்றாடம் பயணிக்கக் கூடிய இடங்களான அரசு மருத்துவமனை, ஒன்றிய அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலர்கள், வங்கி நிலையங்கள், காவல் நிலையங்கள் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலங்களிலும் கிருமி நாசினி எந்திரங்களை வழங்கி இருக்கிறார். 

திமுக கருணாநிதி கைது செய்யப்பட்டு சிறை சென்றபோது அந்த செய்தியை தாங்க முடியாமல் தீக்குளித்து ஆபத்தான நிலையில்  இருந்து மீண்டு வந்தேன். நான் திமுக மீது பற்றுக்கொண்ட நான் மருது அவர்களின் மக்கள்  தொண்டினை பாராட்டும் விதமாகவும், தொகுதி முழுவதும் மக்கள் ஆதரவைப் பெற்ற நபரான மருது அழகுராஜ் மக்கள் பணியில் தன்னை இணைத்துக் கொள்ள அவர் முன்னிலையில் எனது தலைமையில் 60க்கும் மேற்பட்டோர் அதிமுக கட்சியில் இணைந்து உள்ளேன் என்றார்.