பஞ்சமி நிலம் குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டிக்கு பதிலடி கொடுத்துள்ளது திமுக அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி. 

இதுகுறித்து அந்துமணி, சிந்துமணி பகுதியில், ‘’பார்த்தியாடி சிந்து; முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு பேட்டியில், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இல்லை என்பதை ஆதாரத்துடன் திமுக நிரூபிக்க வேண்டும். ஒரு மாதத்திற்குள் நிரூபிக்காவிடில் அரசு அந்த நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளாரே..!

சிந்துமணி;- ‘’பார்த்தேண்டி அந்து; நீர் ஆவியாவதைத் தடுக்க ஆற்றில் தர்மகோல் விட்டது; சோப்பு போட்டு குளித்தால் ஆற்றிக் நுரை ஏற்பட்டுள்ளது என்று பேசும் ‘கூமுட்டை’கள் அதிமுகவில் மட்டும் தான் இருப்பார்கள் என நினைத்தேன். பாஜகவிலும் அத்தகைய கூமுட்டைகள் இருக்கிறார்கள் என்பதை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி தந்து உறுதி தந்துள்ளார்! குற்றம்சாட்டியவர்கள் தானே நிரூபிக்க வேண்டும் என்ற சராசரி அறிவுகூட இல்லாதவர் எப்படி மத்திய அமைச்சராக இருந்தார் பார்த்தாயா? உடையையும், உருவத்தையும் போட்டு ஆளை எடைபோடக்கூடாது என்பதற்கு சரியான சாட்சியாக விளங்குகிறாரடி பொன்.ராதாகிருஷ்ணன்’’என தெரிவித்துள்ளது.