Asianet News TamilAsianet News Tamil

தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சி.. ஊழல்வாதிகளுக்கு எச்சரிக்கை.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி பேட்டி.!

ஊழல் விவகாரங்களில் நாங்கள் சற்று கடுமையாகவே இருப்போம். சட்டப்படியான நடவடிக்கைகளில் தயக்கம் காட்ட மாட்டோம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

DMK rule for 10 consecutive years.. Warning to the corrupt.. Chief Minister MK Stalin's action interview.!
Author
Chennai, First Published Aug 26, 2021, 7:44 AM IST

திமுக ஆட்சி அமைந்து 100 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், அதையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். “ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சி அமையும்போது பொருளாதாரக் கட்டமைப்பை சிர்ப்படுத்தி, நிதி வளங்களைப் பெருக்கி வைப்பதும் வழக்கம். அதிமுக ஆட்சி அமையும்போது பல்வேறு காரணங்களால் அந்த நிலைமை இருப்பதில்லை. கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அதிலும் குறிப்பாக, கடைசி 7 ஆண்டுகளில் மிக மோசமான நிர்வாக சீர்கேட்டின் விளைவுதான், 5 லட்சம் கோடி ரூபாய் கடன். நிதி நிலையைச் சீர்ப்படுத்த கடுமையாகத் திட்டமிட்டு எங்கள் அரசு உழைக்கிறது. இரண்டு-மூன்று ஆண்டுகளில் சீர்ப்படுத்தி விடுவோம் என்ற நம்பிக்கைஇருக்கிறது.DMK rule for 10 consecutive years.. Warning to the corrupt.. Chief Minister MK Stalin's action interview.!
அதுமட்டுமின்றி, பொருளாதார வளர்ச்சிப் பாதையை நோக்கிப் பயணிக்கும் வகையில் ட்ரில்லியன் டாலர் என்ற இலக்கை நிர்ணயித்து செயல்படுகிறோம். எந்தவொரு நெடிய பயணமும் முதல் அடியிலிருந்துதான் தொடங்குகிறது. எங்களின் ஒவ்வொரு அடியும் நம்பிக்கையோடும் உறுதியோடும் எடுத்து வைக்கப்படுகிறது. திமுக அ ரசு 10 ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கும்போது தமிழ் நாடு தனது பொருளாதார இலக்கை அடையக்கூடிய இடத்தில் இருக்கும். மக்கள் எங்களுக்கு அந்த வாய்ப்பை நிச்சயம் வழங்குவார்கள்.DMK rule for 10 consecutive years.. Warning to the corrupt.. Chief Minister MK Stalin's action interview.!
மக்களைக் காக்கும் செயல்பாடுகளில் ஒருங்கிணைந்து கூட்டாகச் செயல்படுவதில் எங்களுக்குத் தயக்கமில்லை. மக்களை ஏமாற்றி, அவர்களுக்குச் சேர வேண்டிய திட்டங்களில் சுரண்டிக் கொள்ளையடித்த விவகாரத்தில் அமைதியாக வேடிக்கை பார்ப்பது என்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை. ஊழல் விவகாரங்களில் நாங்கள் சற்று கடுமையாகவே இருப்போம். சட்டப்படியான நடவடிக்கைகளில் தயக்கம் காட்ட மாட்டோம். தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தப்படி ஊழல் புரிந்தவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகள்தான் நியாயமான வழிமுறைகளில் எடுக்கப்படுகின்றன. மடியில் கனமில்லை என்றால், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கள் வழியில் பயமின்றி செல்லலாம். ஆனால், அவர்களால் அப்படிச் செல்ல முடியவில்லை என்பதுதான் அனைவரும் அறிந்த உண்மை.” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios