திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி நாளிதழில் மறந்து போச்சா மருத்துவரே? என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது. அதில்  முன்பு ராமதாஸ் செய்த சத்தியங்களை பட்டியலிட்டுள்ளது. ’நான் வன்னிய மக்களாகிய உங்களுக்கு ஐந்து சத்தியங்களை செய்து தருகிறேன். இது என் தாய் மீது சத்தியம்.’ 

1. நான் எந்தக்காலத்திலும் வன்னியர் சங்கத்திலோ அல்லது கட்சியிலோ எந்த ஒரு பதவியையும் வகிக்க மாட்டேன். 

2. சங்கத்தின் பொதுக்கூட்டங்களுக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும் எனது செஒந்த செலவில் தான் வந்து போவேன்.

3. எனது வாழ்நாளில் நான் எந்தத் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். எனது கால் செருப்பு கூட சட்டமன்றத்திற்குள்ளும், பாராளுமன்றத்திற்குள்ளும் நுழையாது. 

4. எனது வாரிசுகளோ எனது சந்ததியினரோ யாரும் எந்தக் காலத்துலும் வன்னியர் சங்கத்திலோ அல்லது கட்சியிலோ எந்தப்பதவிக்கும் வரமாட்டார்கள்.

5. எனக்கு இந்த நாட்டின் பிரதமர் பதவி கொடுத்தாலும் சரி, ஸ்விஸ் வங்கியில் ஆயிரம் கோடி ரூபாய் என் பெயரில் போடுவதாக பேரம் பேசினாலும் சரி இந்த ராமதாஸ் விலைபோக மாட்டான். இது சத்தியம் என் தாய் மீது சத்தியம்- இப்படிச் சொன்னது மறந்து போச்சா மருத்துவரே? 

இப்போது வன்னியர் சங்கத்தில் எந்தக் கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லையா? உங்கள் வாரிசு இதுவரை எந்தப்பதவிக்கும் வந்தது இல்லையா?
கடைசியாக 5வது சத்தியத்தை எடப்பாடிக்கு எழுதிக் கொடுத்து சிரிக்காமல் வாசிக்க சொல்லும் தைரியம் உண்டா? எனக் கேள்வி எழுப்பியுள்ளது.