ஒரு நாள் முதல்வர் ஆகி விடுவார் எடப்பாடி என்ற சந்தேகம் எழும் அளவுக்கு திமுகவினர் கடும் அலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
89 பேர் ஒரே மாதிரியான ஆர்ப்பாட்டம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் திமுக எம்எல்ஏக்களை சமாளிக்க முடியாமல் சட்டபேரவை நிர்வாகிகள் திணறி வருகின்றனர்.
ஒரு கட்டத்தில் கடுப்பாகி போன தனபால் திமுக உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற உத்தரவிட்டார்.

ஆனால் 200 காவலர்களால் பெரும்பாலும் தூக்க முடியாத அளவுக்கு வெயிட்டாக உள்ள திமுக உறுப்பினர்களை வெளியேற்ற முடியவில்லை.
இந்நிலையில் சபை மீண்டும் 3 மணிக்கு கூடுவதாக அறிவிக்கப்பட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சட்ட நிபுணர்கள் திமுகவை வெளியேற்றிவிட்டு எடப்பாடி ஆதரவாளர்கள் மட்டும் ஓட்டெடுப்பில் பங்கெடுக்க முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்தனர்.

மேற்கண்ட கேள்விக்கு பதில் கூறிய அவர்கள் "நிச்சயம் பிரதான எதிர்கட்சி இல்லாமல் ஓட்டெடுப்பு நடத்தவே முடியாது என்ற விதி தமிழக சட்டசபையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதனால் இன்றைக்கு வாக்கெடுப்பு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
