இது தொடர்பாக  மாவட்ட செயலாளர்களுக்கு திமுக  தலைவர் ஸ்டாலின் எழுதியுள்ள கடித்ததில்,  தண்ணீர் பிரச்னையை தீர்க்க வரும் 22-ம் தேதி முதல் மாவட்டம் வாரியாக ஆர்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

தண்ணீர் பிரச்சனையை முதலமைச்சரின்  கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ஆர்பாட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும், குடிநீர் பிரச்னை உள்ள பகுதிகளில் மக்களை ஒன்று திரட்டி அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. 

அதிமக ஆட்சியாளர்கள், தமிழகத்தில் குடிநீர் பஞ்சமே இல்லை என பொய்யான பிரசாரம் செய்து வருகின்றனர். உள்ளாட்சி துறை அமைச்சரின் அக்கறையற்ற தன்மையினால் குடிநீர் இன்றி மக்கள் அவதி படுகின்றனர். 

எதிர்கட்சியினர் வீண் வதந்திகைளை பரப்பி வருவதாக அமைச்சர்கள் முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்க அமைச்சர் முயற்சித்து வருகிறார். அமைச்சர்கள் சொல்வது போல் நிலைமை இல்லை.தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி வரும் 22 ஆம் தேதி முதல் மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.