ஜல்லிக்கட்டு நடைபெற உரிய நடவடிக்கையை உரிய நேரத்தில் எடுக்கத் தவறிய மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்து, இன்று மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்குமுன்னால் அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி தமிழகம் முழுவதும் இன்று திமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,

கென்னை பாரிமுனையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவசகம் அருகே மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் துரைமுருகன், கனிமொழி,டி.ஆர்,பாலு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

காளைகள் எங்கள் குழந்தையடா..இதைக் கட்டித் தழுவுவது இன்பமடா என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முழுக்கமிட்டனர்,

பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும்,உடனடியாக அவசரச் சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.