ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய,மாநில அரசை கண்டித்து திமு.க. சார்பில் வரும் 24ல் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று கருணாநிதி அறிவித்துள்ளார்.
கடந்த 9ம் தேதி இரவு பிரதமர் மோடி 500,1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இதனால் நட்டு மக்கள் அனைவரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும், ஒவ்வொரு நாளும் புதிய அறிவிப்புகளையும் வெளியிடுகிறது மத்திய அரசு. இதனை நாட்டில் உள்ள பல கட்சிகள், வன்மையாக கண்டித்து போராட்டமும் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், இந்த நோட்டு விவகாரத்தால் பொதுமக்கள் பெரிதும் இன்னல் பட்டு வருவதாகவும், இதற்கு தக்க நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசை கண்டித்து வரும் 24ல் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
