Asianet News TamilAsianet News Tamil

மாவட்டச் செயலாளர் பதவி தானே கேட்டேன்..! செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்கம்..!

இந்த கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியால் தம்புடிக்கு பிரயோஜனம் இல்லை என்கிறார்கள். இது ஒரு அலங்கார பதவி அவ்வளவு தான். திமுகவின் பொதுக்குழு, செயற்குழுவில் முன்வரிசையில் இடம், பேச வாய்ப்பு அவ்வளவு தான். மேலும் அண்ணா அறிவாலயம் அடிக்கடி வந்து செல்ல முடியும். ஆனால் மாவட்டச் செயலாளர் பதவி என்றால் ஒரு மாவட்டத்தை கட்டி ஆள்வது போன்றது. எனவே என்ன தளபதில் இப்படி செய்துவிட்டார் என்று செந்தில் பாலாஜியை தொடர்பு கொண்டு தங்கம் வருத்தப்பட்டதாக சொல்கிறார்கள்.

DMK propaganda secretary...Thanga Tamilselvan appointed
Author
Tamil Nadu, First Published Aug 31, 2019, 10:26 AM IST

மாவட்டச் செயலாளர் பதவி தருவதாக கூறித்தானே திமுகவில் இணைத்தீர்கள் என்று செந்தில் பாலாஜியிடம் தங்கதமிழ்ச் செல்வன் புலம்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

டி.டி.வி. தினகரன் மற்றும் சசிகலாவின் மிகத் தீவிரமான ஆதரவாளர்களில் ஒருவராக இருந்தவர் தங்கதமிழ்ச் செல்வன். அதிமுகவில் தினகரன் ஓரங்கப்பட்டப்பட்ட பிறகு அவர் பின்னால் அணிவகுத்தவர்களில் மிக முக்கியமானவர் தங்தமிழ்ச் செல்வன். தினகரனுக்கு ஒரு தளபதி போல் செயல்பட்டு ஊடகங்களில் முட்டுக் கொடுத்தும் வந்தார் இவர். மேலும் அமமுகவில் கொள்கை பரப்புச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளையும் தங்கதமிழ்ச் செல்வன் வகித்தார். DMK propaganda secretary...Thanga Tamilselvan appointed

தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் தகுதி நீக்கத்திற்கு ஆளான எம்எல்ஏக்களில் ஒருவராகவும் தங்கதமிழ்ச் செல்வன் மாறினார். மேலும் தேனி தொகுதியில் அமமுக வேட்பாளராக களம் இறங்கி படுதோல்வி அடைந்தார். இதனை தொடர்ந்து தினகரனுடன் தங்கதமிழ்ச் செல்வனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சில விஷயங்களில் தங்கதமிழ்ச் செல்வன் தன்னிச்சையாக செயல்பட்டதால் தினகரன் அவரை ஓரங்கட்டினார். இதனால் மதுரை அமமுக பிரமுகர் ஒருவரை செல்போனில் அழைத்து ஆபாசமாக அர்ச்சித்தார் தங்கம். DMK propaganda secretary...Thanga Tamilselvan appointed

இந்த ஆடியோ வெளியானதை தொடர்ந்து தான் அமமுகவில் இருந்து விலகிவிட்டதாக கூறி அதிர வைத்தார். பிறகு செந்தில் பாலாஜி மூலமாக திமுகவில் ஐக்கியமானார். அதோடு நிற்காமல் தேனியில் தனது ஆதரவாளர்கள் சுமார் 20 ஆயிரம் பேரை திமுகவில் இணைய வைத்தார். மேலும் அதற்கான உறுப்பினர் கார்டுகளை ஸ்டாலினிடம் நேரடியாக பெற்று பாராட்டப்பட்டார். இந்த நிலையில் திடீரென நேற்று திமுக நிர்வாகிகள் அறிவிப்பு வெளியானது.

 DMK propaganda secretary...Thanga Tamilselvan appointed

அதில் யாரும் எதிர்பாராத வகையில் தங்கதமிழ்ச் செல்வனுக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. திருச்சி சிவா, ஆ.ராசா போன்ற திமுகவின் சீனியர் தலைகளுக்கு இணையாக நேற்று கட்சியில் இருந்த தங்கதமிழ்ச் செல்வனுக்கு மிகப்பெரிய பொறுப்பு கொடுக்கப்பட்டது. இதனை தங்கதமிழ்ச் செல்வனாலேயே நம்ப முடியவில்லை. ஏனென்றால் அவர் எதிர்பார்த்து காத்திருந்தது வேறு பதவி.

திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது. இதே போல் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. தற்போது கரூர் மாவட்ட திமுக என்றால் அது செந்தில் பாலாஜி என்றாகிவிட்டது. இதே போன்றதொரு எதிர்பார்ப்புடன் தான் அதாவது தேனி மாவட்டச் செயலாளர் ஆகும் எதிர்பார்ப்புடன் தான் செந்தில் பாலாஜி மூலமாக திமுகவில் இணைந்தார் தங்கதமிழ்ச்செல்வன்.DMK propaganda secretary...Thanga Tamilselvan appointed

ஆனால், கள்ளர் சமுதாயத்தை சேர்ந்த தங்கதமிழ்ச்செல்வனை தேனி மாவட்ட பொறுப்பாளராக்க கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று ஸ்டாலின் பொறுமை காத்து வந்தார். ஆனால் தங்கதமிழ்ச் செல்வன் தனக்கான பதவி குறித்து மீண்டும் மீண்டும் செந்தில் பாலாஜியை குடைந்துள்ளார். இதனால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாகவே கொள்கைபரப்புச் செயலாளர் எனும் உயரிய பொறுப்பை தங்கதமிழ்ச் செல்வனுக்கு வழங்கியுள்ளனர். DMK propaganda secretary...Thanga Tamilselvan appointed

ஆனால் இந்த கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியால் தம்புடிக்கு பிரயோஜனம் இல்லை என்கிறார்கள். இது ஒரு அலங்கார பதவி அவ்வளவு தான். திமுகவின் பொதுக்குழு, செயற்குழுவில் முன்வரிசையில் இடம், பேச வாய்ப்பு அவ்வளவு தான். மேலும் அண்ணா அறிவாலயம் அடிக்கடி வந்து செல்ல முடியும். ஆனால் மாவட்டச் செயலாளர் பதவி என்றால் ஒரு மாவட்டத்தை கட்டி ஆள்வது போன்றது. எனவே என்ன தளபதில் இப்படி செய்துவிட்டார் என்று செந்தில் பாலாஜியை தொடர்பு கொண்டு தங்கம் வருத்தப்பட்டதாக சொல்கிறார்கள்.

அதே சமயம் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி என்றால் மாநிலங்களவை எம்பியாக வாய்ப்பு இருப்பதாக கூறி தங்கத்தை ஆஃப் செய்துள்ளாராம் செந்தில் பாலாஜி.

Follow Us:
Download App:
  • android
  • ios