Asianet News TamilAsianet News Tamil

திமுக புள்ளிகள் எம்எல்ஏக்கள் ...பாஜக, அதிமுக பக்கம் வருவார்கள்... ஆரூடம் சொல்லும் விபி துரைச்சாமி.!!

திமுக துணைப் பொதுச்செயலாளர் விபி துரைசாமி கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக தமிழக தலைவர் எல். முருகனை சந்தித்தார்.இந்த சந்திப்பை காரணம் காட்டி திமுக தலைமை அவரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்தது.
 

DMK points MLAs come to BJP ...
Author
Tamil Nadu, First Published May 22, 2020, 10:54 PM IST

திமுக துணைப் பொதுச்செயலாளர் விபி துரைசாமி கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக தமிழக தலைவர் எல். முருகனை சந்தித்தார்.இந்த சந்திப்பை காரணம் காட்டி திமுக தலைமை அவரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்தது.

DMK points MLAs come to BJP ...
 
விபி துரைசாமி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்தவர் பாஜகவில் இணைந்திருப்பது பாஜகவுக்கு புதுவரவாக அமைந்துள்ளது. விபி துரைசாமியை அடுத்து மேலும் சிலர், அதிமுக மற்றும் பாஜகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

DMK points MLAs come to BJP ...
இந்த நிலையில், விபி துரைசாமி பேட்டி ஒன்றில் கூறுகையில் "திமுக எம்எல்ஏக்கள் பலர் சமுதாயம் சார்ந்த அதிமுக அமைச்சர்களிடம் இன்னும் தொடர்பில் இருக்கின்றார்கள்.2021 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுகவில் இருந்து பலர் வெளியேறி அதிமுக மற்றும் பாஜகவிற்கு வர வாய்ப்பு இருப்பதாகவும், இவ்வாறு நடந்தால் அது திமுகவிற்கு பெரும் பின்னடைவாக இருக்கும்.

DMK points MLAs come to BJP ...

 கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் திமுக ஆட்சியில் இல்லாத நிலையில் வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது. இந்த நிலையில் திமுகவில் பல்வேறு மாவட்டங்களில் குறுநில மன்னர்கள் போல் ஆட்சி செய்யும் மா.செக்களை அதிமுக பாஜக குறிவைத்திருக்கிறது. இவர்களோடு சேர்த்து எந்தெந்த தொகுதியில் திமுக எம்எல்ஏக்களுக்கு  மக்கள் செல்வாக்கு இருக்கிறதோ அவர்களை எல்லாம் பாஜக பக்கம் இழுக்கும் திட்டமும் அதை செயல்படுத்துவதற்கான திட்டத்தையும் பாஜக அதிமுக இணைந்தே செயல்படுத்த இருக்கிறார்களாம்.சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதுபோன்ற காட்சிகள் மாறலாம் என்கிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios