தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் சென்னை பெருங்குடியில் உள்ள சாலையோரக் கடையில் அமர்ந்து  இரவு உணவு சாப்பிட்ட புகைப்படம் சமூகவலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது. 

தென் சென்னை நடளுமன்ற தொகுதியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் மகனும் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெ.ஜெயவர்தனை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்றவர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆவார். இவர் நீண்ட அரசியில் பாரம்பரியமிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர் ஆவார். முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரியுமான இவர், எழுத்து,கவிதை,  பேச்சு என தனக்கென தனி அடையாளத்தை கொண்டவர் ஆவார். திமுக மகளீர் அணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியின் நெருங்கிய தோழியம் ஆவார்.  நாடாளுமன்றத்தில் தனது கன்னிப்பேச்சின் மூலம் மிக சரளமாக ஆங்கிலத்தில் உரையாற்றி சக நாடாளுமன்ற உறுப்பினர்களின்  பாரட்டை பெற்றவர் தமிழிச்சி. கருணாநிதியின் மகளான கனிமொழியையே மிஞ்சும் ஆற்றல் கொண்டவர் என்று பேசப்படும் அளவிற்கு திறமையான அரசியல் புது முகம் என்றே சொல்லலாம். 

எப்போதும்  முகப் பொலிவுடன் புன்னகை ததும்ப முகத்துடன்  காட்சிதரும் தமிழச்சிக்கென்று அரசியல், மற்றும் இலக்கிய வட்டத்தில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு . அந்தளவிற்கு பிரபலமான தமிழச்சி சென்னை பெருங்குடியில் உள்ள சலையோரக்கடை ஒன்றில்  மக்களோடு மக்களாக அமைந்து இரவு உணவு சாப்பிட்ட சம்பவம்தான் தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக். அதாவது தேர்தல் நேரத்தின் போது  பொருங்குடி பகுதியில் பிரசாரம் செய்தபோது அங்குள்ள தள்ளு வண்டி கடையில் மக்கள் சாப்பிடுவதை பார்த்து தானும் அங்கு சாப்பிட வேண்டும் என்று அப்போது ஆசைப்பட்டுள்ளார்.

ஆனால் பிரச்சார பிசியில்  அவரால் அங்கு சாப்பிட முடியவில்லை. எனவே பாராளுமன்ற கூட்டம் எல்லாம் முடிந்து கொஞ்சம் ரிலாக்ஸாக இருந்துவரும் தமிழச்சுக்கு  பெருங்குடி ரோட்டுக்கடை நினைவுக்கு வரவே.  நேராக கார் எடுத்துக்கொண்டு அந்த கடைக்கு  சென்று விட்டார், அவர் அங்கு எந்த அலட்டலும் இல்லாமல் மிக ஹாயாக அமர்ந்து முட்டைதோசை, பொடி தோசை என ஒரு கட்டு கட்டிவிட்டு வந்திருக்கிறார். திடீரென்று தமிழிச்சி சாலையோரக்கடையில் சாப்பிட்டதை பார்த்தவர்கள் படம் பிடித்து சமூகவலைதளத்தில் விட அது தற்போது பிரவி வைரலாகி வருகிறது.