Asianet News TamilAsianet News Tamil

மிரட்டலுக்கு அஞ்சாது திமுக . பூச்சாண்டி வித்தைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் ஸ்டாலின்.. ஸ்டாலின் வேலுமணி மோதல்.

மக்கள் பணியாளர்களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டி அவதூறு பரப்பும் பூச்சாண்டி வித்தைகளை முக ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

DMK not intimidated. Stalin must stop flowering tricks .. Stalin Velumani
Author
Tamilnadu, First Published Jun 8, 2020, 12:39 AM IST

தமிழக அரசு கொரோனா பிரச்சனையில் தவறிழைத்து விட்டதாகவும் அமைச்சர் வேலுமணி ஊழல் செய்து விட்டதாகவும் போராட்டங்களும் அறிக்கைகளும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தபடியே இருக்கிறார். தற்போது அமைச்சர் வேலுமணிக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இடையே அறிக்கை மோதல் கொரோனாவை விட பலமாக வலுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தவறிழைத்து வருவதாகவும், திமுக வினர் மீது பொய் வழக்கு போட்டுவருதாகவும் தமிழக அரசின் நடவடிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

DMK not intimidated. Stalin must stop flowering tricks .. Stalin Velumani
இதனிடையே, கோவை மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், அப்பகுதியில் கட்டுமானப் பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகள் வேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்படுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பற்றி விமர்சித்தார். இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, புகாரின் பேரில், தென்றல் செல்வராஜ், அவருடைய உதவியாளர் இருவரும் கைது செய்யப்பட்டனர். இதனால், கோபமடைந்த திமுகவினர், அமைச்சரை விமர்சனம் செய்தால் வழக்கு போடுவீர்களா அதற்காகவெல்லாம் அஞ்சமாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஊழல்களை எதிர்த்துப் போராடும் திமுகவினர் மீது காவல்துறையை ஏவி பொய்வழக்குப் போடும் அராஜக நடவடிக்கையைக் கண்டித்து கோவையில் தொடர் போராட்டம் என கோவை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

 


இதனைத் தொடர்ந்து, “50% கொரோனா மரணங்களை, அ.தி.மு.க. அரசின் சுகாதாரத்துறை மறைத்து விட்டது என்ற செய்தி பேரதிர்ச்சியளிக்கிறது. என்றும் சென்னை மக்களின் உயிரோடு விளையாடுவதைக் கைவிட்டு, ‘சமூகப் பரவல்’ வந்து விட்டதா என்பதை ஆய்வு செய்து, அறிவியல்ரீதியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

மு.க.ஸ்டாலின்.., 'அமைச்சர் எஸ்.பி.வேலுமணியைக் விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டதால் சூடான அமைச்சர், மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “மக்கள் பணியாளர்களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டி அவதூறு பரப்பும் பூச்சாண்டி வித்தைகளை முக ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும்.” என்று மு.க.ஸ்டாலினை விமர்சித்து அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், “முதல்வரின் செயல்பாட்டிற்கு ஈடுகொடுக்க முடியாமல், எதிர்க்க இயலாத நிலையில் தமிழகத்தின் நலன்களை புறக்கணித்து, கோவையில் மாவட்ட அளவில் போராட்டம் நடத்திட 5 மணிநேரம், திமுக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து, மு.க.ஸ்டாலின் அவர்கள் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேரிடர் நேரத்திலும், சாதாரண எளியோனான என்னை எதிர்த்து, போராட்டங்களை தூண்டிவிடுவது, வேடிக்கையாகவும், விந்தையாகவும் உள்ளது.

சரிந்து கொண்டிருக்கும் தன் அரசியல் செல்வாக்கை கொரோனா மூலமாக சரிக்கட்டலாம் என்று ஸ்டாலின் நினைத்தால் அவருக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சும். காரணம் மதம், இனம், சாதி என்னும் பாகுபாடுகளைக் கடந்து மக்கள் அனைவரையும் நேசிக்கும் கொள்கைகளாலும், செயல்களாலும் இன்று தமிழ்நாட்டு மக்களின் இதயத்தில் இடம்பிடித்திருக்கிறார் முதலமைச்சர். மகத்தான மக்கள் செல்வாக்கால் இமயம் போல் உயர்ந்து நிற்கும் எடப்பாடியார் முன் இடிமுழக்கம் கேட்ட எலியாய் ஓடிமறைவார் மு.க.ஸ்டாலின்.

DMK not intimidated. Stalin must stop flowering tricks .. Stalin Velumani
திமுக தலைவரைப் போல ”கொரோனா வெல்லாம் எப்படி போகுது?” என்று கிண்டலும், கேலியுமாக அரசியல் பிழைப்பு நடத்தும் வேடதாரியல்ல நாங்கள். செல்வத்தையும், செல்வாக்கையும் பகட்டாக காட்டிக் கொள்ளும் தங்கள் சொந்த கட்சிக்காரர்களுக்கே நிவாரணப் பொருட்கள் என்ற பெயரில் பொட்டலங்களை வழங்குவதையும், அதை புகைப்படம் எடுத்து விளம்பரம் தேடுவதையும், மு.க.ஸ்டாலின் பொழுது போக்காக செய்வதைப் போல் அல்ல, எங்கள் மக்கள் பணி. மக்களோடு மக்களாய் தோள்நின்று உழைப்பவர்கள் நாங்கள் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

இரவு, பகல் பாராது, உயிரைப் பணயம் வைத்து மக்கள் பணியாற்றும் அரசு ஊழியர்களையும், காவல்துறையினரையும், தன்னார்வ தொண்டர்களையும் கொச்சைப்படுத்தி விளையாடும் வழக்கத்தை மு.க.ஸ்டாலின் கைவிட வேண்டும். இல்லையேல் மக்களின் இன்றைய கேலியும், கிண்டலும் நாளை ஸ்டாலினுக்கு எதிரான பெரும் கோபமாய் உருமாறும். அதைத்தாங்கும் சக்தி ஸ்டாலினுக்குக் கிடையாது என்பதை அவர் உணர வேண்டும்.

கடந்த 2006 – 2011ல் மைனாரிட்டி அரசாக இருந்த திமுக ஆட்சியில் கோவை மாவட்டத்தில் பேரூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த என்மீது உட்பட 10 சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் காவல்துறையினரை வைத்து, பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி, 5 முறை பொய் வழக்குகளை பதிவு செய்து, 17 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டோம். அவ்வழக்குகளை விதிமுறைக்குட்பட்டு சட்ட ரீதியாக எதிர்கொண்டோம் என்பதை அன்றைய துணை முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் மறந்துவிட்டாரா? மக்கள் மறந்துவிடவில்லை.

 

 

ஆனால், கோவை தெற்கு மாவட்ட திமுக கழக பொறுப்பாளரான தென்றல் செல்வராஜ், அவரிடம் உதவியாளராக பணிபுரியும் கீர்த்திஆனந்த் என்பவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணைக்காக கைது செய்து காவல்துறை வாகனத்தில் அழைத்து வரும்போது, வால்பாறை சாலையில் சுமார் 50க்கும் மேற்பட்டோருடன் தென்றல் செல்வராஜ் அவர்கள் காவல்துறை வாகனத்தை மறித்து அவரது உதவியாளரை விடுவித்து தலைமறைவு ஆகிவிட்டனர்.

காவல்துறையினரை தங்களது பணியை செய்யவிடாமல் தடுத்தும், அராஜகபோக்குடன் திமுக குண்டர்களின் துணையுடன், வழக்கு பதிவு செய்யப்பட்ட கைதியை விடுவித்து சென்றதால், காவல்துறையினர் சட்ட விதிகளின்படி செயல்பட்டு சட்டம் ஒழுங்கை காக்க தென்றல் செல்வராஜ் மற்றும் அவரது உதவியாளரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

காவல்துறையினரை தங்களது பணியினை செய்ய விடாமல் தடுத்து, அராஜபோக்கில் ஈடுபட்ட திமுகவைச் சார்ந்த பொறுப்பாளர்களையும், குண்டர்களையும் கண்டிப்பதை விடுத்து, ஜெயலலிதாவின் குறுக்கு வழியில் முதல்வராக முயற்சித்து சட்டமன்றத்திலும் பொது இடங்களிலும் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றிய மு.க.ஸ்டாலின் கழகத்தை பிளவுபடுத்தும் நோக்கில் செயல்பட்டதை முறியடித்து அஇஅதிமுகவை ஒருங்கிணைத்து கழகம் தொடர்ந்து ஆட்சிபொறுப்பில் தொடர ஜெயலலிதாவின் விசுவாசியாக இருந்து முக்கிய பங்காற்றிய என்மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியால் தங்களது தவறை மறைத்து, மக்களை திசை திருப்பும் வகையில், அமைச்சர் வேலுமணி 3 ஆயிரம் கோடி ஊழல் என கூறி மாபெரும் போராட்டத்தை கோவையில் நடத்துவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதிமுகவினர் கொரோனா தொற்று பேரிடர் நேரத்தில் பொதுமக்கள் துயர்துடைக்கும் பணிகளில் ஆத்ம திருப்தியுடன் பங்கெடுத்தோம் என்பதை கோவை மக்கள் நன்கு அறிவர்.

DMK not intimidated. Stalin must stop flowering tricks .. Stalin Velumani

ஆனால் திமுகவினர் பொதுமக்களுக்கு சொந்தமாக உதவ துப்பில்லாமல், இரட்டை இலக்க எண்ணிக்கையில் அங்கொன்று இங்கொன்று வழங்கிவிட்டு புகைப்படம் எடுத்து ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகள் வாயிலாக தங்களை விளம்பர படுத்திக் கொண்டு கொரோனா பணியில் ஈடுபடுத்திக் கொண்டதாக பொதுமக்களுக்கும், திமுகவின் தலைமைக்கும் தெரிவித்து நாடகமாடி மக்களை ஏமாற்ற முற்படுகின்றனர். உரிய நேரத்தில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.” என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.


 

Follow Us:
Download App:
  • android
  • ios