திருச்சி மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட தமிழர் டாக்டர் ராஜ் ஐயர் அமெரிக்க ராணுவத்தின் முதல் சிஐஓ-வாக பதவியேற்றுள்ளார். இது தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளதாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில், அரசியல் விமர்சகரான சுமந்த் ராமனும், தனது பங்கிற்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அதாவது, “டாக்டர். ராஜ் ஐயருக்கு வாழ்த்துக்கள்!!!, அமெரிக்க ராணுவத்தின் சிஐஓ பதவியை பெறும் முதல் இந்தியர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த நபர்,” எனக் குறிப்பிட்டிருந்தார். சுமந்த் ராமனின் இந்தப் பதிவை சம்பந்தமே இல்லாமல் விமர்சித்து திமுக எம்பி செந்தில்குமார் டுவிட் செய்திருப்பது நெட்டிசன்களிடையே அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திமுக எம்பி செந்தில்குமார் கூறியதாவது :- பெரியாரின் சமூக நீதி சாதனையினால்தான் உங்க பெயருக்கு பின்னால் சுமந்த் ராமன் ஐயர் எனப் போட முடியவில்லை. உங்களுக்கு என்ன சார், நீங்க தான் CDO -Chief Defence Officer of ADMK. அப்போறோம் என்ன கவலை, எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு சுமந்த் ராமன் பதிலடி கொடுத்து டுவிட் போட்டுள்ளார். அதில் ,”ஒரு வீடியோ பார்த்தேன் சார்.அதுல உங்கள மாதிரியே ஒருத்தர் மீடியா கிட்ட பேசறாரு. அதுல அவர் தாத்தா பெயர் வடிவேல் கவுண்டர்னு சொன்னாரு. வடிவேல் அவருடைய பெயர். கவுண்டர் அவர் வாங்கிய பட்டமா சார்? நான் கரையை சேர்ந்துட்டேன். நீங்க?,” எனக் கூறி பதிலடி கொடுத்துள்ளார்.

அவருடன் சேர்ந்து நெட்டிசன்களும் திமுக மற்றும் எம்பி செந்தில்குமாரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதில் சிலர், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உலக அளவில் பல்வேறு சாதனைகளையும், நமது நாட்டிற்கு இந்தியாவிற்கு பல்வேறு பெருமைகளையும் பெற்றுத் தந்து கொண்டிருக்கும் போது, அதனை வாழ்த்தா விட்டாலும் கூட, அதல் சாதியை வைத்து அரசியல் செய்ய திமுக நினைப்பது வெட்கக்கேடானது, என நெட்டிசன்கள் எம்.பி., செந்தில்குமாரை எல்லாவற்றிலும் சாதியை வைத்து அரசியல் நடத்த நினைக்கிறீர்கள். இது நியாயமா மிஸ்டர் செந்தில்குமார் என கடுமையாக திட்டித் தீர்த்து வருகின்றனர்.