திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ஆர்.எம்.எல். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ஆர்.எம்.எல். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக நாடாளுமன்ற எம்.பிக்கள் அனைவரும் டெல்லியில் உள்ளனர். திமுக எம்.பி திருச்சி சிவாவும் டெல்லியில் இருக்கிறார்.
இதையும் படிங்க;- உண்மை எதுவென்று தெரியாமல் உளறாதீங்க.. இது உங்க பதவிக்கு அழகு அல்ல.. இபிஎஸ்ஐ பங்கம் செய்த அமைச்சர்.!

இந்நிலையில், திருச்சி சிவாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் உடனே டெல்லியில் உள்ள ஆர்.எம்.எல். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த வருகிறார்.

இதையும் படிங்க;- தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு புகழ் எடப்பாடியாரே! நீங்க சட்டம்-ஒழுங்கு பற்றி பேசலாமா? போட்டு தாக்கிய முரசொலி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருச்சி சிவா சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. திமுகவின் மாநிலங்களவை எம்.பி.யான திருச்சி சிவா 1996, 2002, 2007, 2014 மற்றும் 2020 என 5 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க;- 100 யூனிட் இலவசம் வேண்டாமா.? இந்த படிவத்தை பூர்த்தி பண்ணுங்க.. செந்தில் பாலாஜி அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.
