சேலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த திமுக மக்களவை தொகுதி எம்.பி. பார்த்திபனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சீனாவின் உருவான கொரோனா வைரஸ் இந்தியாவில் ருத்தரதாண்டவம் ஆடியது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு  பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளனர். சில அமைச்சர்கள், நாடாளுமன்ற  உறுப்பினர்கள் மற்றும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களை ஒப்பிடும் போது தற்போது கொரோனா பரவல் குறைவாகவே இருக்கிறது. இருப்பினும், உருவாறிய புதிய கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் மக்கள் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட சேலம் திமுக எம்.பி.பார்த்திபனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவர்கள் அறிவுரைப்படி அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்த நபர்களையும் கொரோனா சோதனை செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.