திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி ரவி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். 

திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் கே.பி.ராமலிங்கம் கடந்த ஏப்ரல் மாதம் நீக்கப்பட்டார். திமுக மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்த ராமலிங்கம், கலைஞர் கருணாநிதி உயிருடன் இருந்த போது, அழகிரியின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். 

இதனையடுத்து, தமிழகத்தில் கொரோனா வைரல் பரவல் தொடர்பாக தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். மு.க. ஸ்டாலினின் இந்த பேச்சை கே.பி. ராமலிங்கம் விமர்சனம் செய்தார். இதனால், திமுகவிலிருந்து கட்டம் கட்டப்பட்டு கே.பி.ராமலிங்கம் நீக்கப்பட்டார். அடிப்படையில் மு.க. அழகிரியின் ஆதரவாளராக இருந்த கே.பி. ராமலிங்கம், மு.க ஸ்டாலினை தொடர்ச்சியாக பல சந்தர்ப்பங்களில் விமர்சித்து வந்தார். 

இதனையடுத்து, கே.பி.ராமலிங்கம் அதிமுகவில் இணைய உள்ளதாக முதலில் தகவல் வெளியானது. இந்நிலையில், திமுக முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார். பின்னர், கே.பி.ராமலிங்கத்திற்கு உறுப்பினர் அட்டையை தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி ரவி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் எல்.முருகன், எச்.ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.