Asianet News TamilAsianet News Tamil

ஜனநாயகத்தை மீட்டெடுத்த கங்கை கொண்ட சோழன்... அண்ணன் மு.க. ஸ்டாலினை மனதார வாழ்த்திய தங்கை கனிமொழி!

நாட்டையும் நாட்டு மக்களையும் பிரிக்கும் எந்தச் செயலையும் சட்டங்களையும் எதிர்ப்பவராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளார். மத்திய அரசுக்கு எதிராக தலைவர் அறிவித்த போராட்டத்தை கைவிடும்படி ஆளுநரே அழைத்து திமுக தலைவரிடம் கேட்டுக்கொள்ளும் அளவுக்கு தன்னுடைய ஆளுமையை நிலைநிறுத்திவர் மு.க.ஸ்டாலின்.

DMK MP Kanimozhi birthday wishes to m.k.stalin
Author
Chennai, First Published Feb 29, 2020, 10:49 PM IST

ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் எப்படி கங்கையை மீட்டு கங்கை கொண்ட சோழன் என அழைக்கப்பட்டாரோ அதுபோலவே இந்தியாவில் தேர்தலில் ஜனநாயகத்தை மீட்டெடுத்து கங்கை கொண்ட சோழனாக திகழ்ந்துவருகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

DMK MP Kanimozhi birthday wishes to m.k.stalin
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 67-வது பிறந்த நாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிரணியினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக எம்.பி. கனிமொழி கலந்துகொண்டு பேசுகையில், “இன்று நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.மக்களை பிளவுபடுத்தும் சட்டங்களை மத்திய அரசு இயற்றும் காலகட்டத்தில் இருக்கிறோம்.  இந்தச் சட்டங்களுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் மவுனம் சாதிக்கும் மாநில அரசு உள்ளது.

DMK MP Kanimozhi birthday wishes to m.k.stalin
நாட்டையும் நாட்டு மக்களையும் பிரிக்கும் எந்தச் செயலையும் சட்டங்களையும் எதிர்ப்பவராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளார். மத்திய அரசுக்கு எதிராக தலைவர் அறிவித்த போராட்டத்தை கைவிடும்படி ஆளுநரே அழைத்து திமுக தலைவரிடம் கேட்டுக்கொள்ளும் அளவுக்கு தன்னுடைய ஆளுமையை நிலைநிறுத்திவர் மு.க.ஸ்டாலின். ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் எப்படி கங்கையை மீட்டு கங்கை கொண்ட சோழன் என அழைக்கப்பட்டாரோ அதுபோலவே இந்தியாவில் தேர்தலில் ஜனநாயகத்தை மீட்டெடுத்து கங்கை கொண்ட சோழனாக திகழ்ந்துவருகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.DMK MP Kanimozhi birthday wishes to m.k.stalin
நாட்டில் நடக்கும் பிரச்னைகளுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் என்ன சொல்கிறார் என மற்ற மாநில அரசியல் தலைவர்கள் உற்று கவனிக்கிறார்கள். தமிழகத்தையும் திமுகவையும் தலைநிமிரச் செய்யக்கூடியவர் ஸ்டாலின். தற்போது நாடே பற்றி எரிகிறது. இதற்கு அதிமுகவும் அதன் கூட்டணி கட்சியும் சிஏஏவுக்கு ஆதரவாக அளித்த வாக்குகளே காரணம். அந்த வாக்குகள் மட்டும் அளிக்கப்படாமல் இருந்திருந்தால் இந்தச் சட்டத் திருத்தமே வந்திருக்காது.” என்று கனிமொழி பேசினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios