Asianet News TamilAsianet News Tamil

வாய் கொழுப்பில் திமுக MP வாங்கிய வன்கொடுமை வழக்கு...குற்றப்பத்திரிக்கை நகல் ஒப்படைப்பு... பதறும் திமுக.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் திமுக எம்பி ஆர்.எஸ் பாரதி  மீது பதியப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிக்கை நகல் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

 

DMK MP bought PCR case ... charge sheet copy handing over ... DMK panicking.
Author
Chennai, First Published Nov 13, 2020, 11:03 AM IST

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் திமுக எம்பி ஆர்.எஸ் பாரதி  மீது பதியப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிக்கை நகல் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான திமுக எம்பி ஆர்.எஸ் பாரதியிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. 

DMK MP bought PCR case ... charge sheet copy handing over ... DMK panicking.

சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று பேசிய திமுக எம்பி ஆர்.எஸ் பாரதி தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்தும், உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்தும் அவதூறாகவும் இழிவாகவும் பேசியதாக ஆதித்தமிழர் மக்கள் கட்சி சார்பில் கல்யாண சுந்தரம் என்பவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின்படி திமுக எம்.பி ஆர்.எஸ் பாரதி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. 

DMK MP bought PCR case ... charge sheet copy handing over ... DMK panicking.

இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது இந்த வழக்கு சென்னையில் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதில் விசாரணைக்காக ஆர்.எஸ் பாரதி நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். அப்போது அவரிடம் வழக்கின் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் வருகிற நவம்பர் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios