ஷாக்கிங் நியூஸ்.. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியும் திமுக எம்.பி. கனிமொழிக்கு கொரோனா பாதிப்பு.!

திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DMK MP and Womens Wing Chief Kanimozhi tests positive for Covid

திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 684 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. குறிப்பாக சென்னை,  செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதாரதத்தறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 

DMK MP and Womens Wing Chief Kanimozhi tests positive for Covid

இந்நிலையில், திமுக எம்.பி. கனிமொழிக்கு மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுது. லேசான அறிகுறியே இருப்பதால் மருத்துவர்கள் அறிவுரைப்படி வீட்டில் தன்மை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

DMK MP and Womens Wing Chief Kanimozhi tests positive for Covid

தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் போது கொரோனா பாதிக்கப்பட்ட கனிமொழி கவச உடை அணிந்து வந்து தனது வாக்கை பதிவு செய்தார். இந்நிலையில், இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட கனிமொழிக்கு மீண்டும் தொற்று பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருந்து வருகிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின் லேசான காய்ச்சல் காரணமாக ஓய்வில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios