அதிமுக அரசை மற்ற மக்கள் தயாராகி விட்டனர் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா தெரிவித்துள்ளார் . எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முதல்வராக அமருவார் என்றும் அவர் கூறியுள்ளார். பெரம்பலூர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .  இதில் சிறப்பு விருந்தினராக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ராசா கலந்து கொண்டார் அப்போது மேடையில் பேசிய அவர்

,  

கட்சி நிர்வாகிகள் ,  இளைஞரணி நிர்வாகிகள் ,  மற்றும் உறுப்பினர்கள் இணைந்து கட்சியை வளர்க்க பாடுபட வேண்டும் என்றார்.   தமிழகத்தில் நடந்துவரும் அதிமுக ஆட்சியை அகற்ற மக்கள் இப்போதே தயாராகிவிட்டனர் அதற்கு சாட்சியாக  தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை  பார்க்க வேண்டும் என்றார் .  அதேபோல் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் மக்கள் திமுகவுக்கு ஏகோபித்த ஆதரவை வழங்கியுள்ளனர் .  அதிமுக மீது மக்கள் வெறுப்பின் உச்சத்தில்  இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி என்றார். 

 

வெற்றி பெற வேண்டிய நிலையில் திமுகவினர் மேலும் விரைந்து சுறுசுறுப்புடன் செயலாற்றி எதிர்வரும்  நகர , பேரூர் ,  உள்ளாட்சித் தேர்தல்களிலும் ,  அதேபோல் சட்டசபை  தேர்தலிலும் ,  சிறப்பாக பணியாற்றிய அதிமுக அரசை அகற்ற  பாடுபடவேண்டும் என்றார் . அதுமட்டுமல்லாது எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுகவை அகற்றி திமுகவை வெற்றி பெற வைத்து திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை முதலமைச்சராக அரியணையில் அமர வைக்க வேண்டியது நமது கடமை என்றார் அவர்.