Asianet News TamilAsianet News Tamil

தேனி எம்பி ரவீந்திரநாத் தலைமையில் மாவட்ட வளர்ச்சி கூட்டம்..! புறக்கணித்த திமுக எம்எல்ஏக்கள்..

தேனி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தேனி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

DMK MLAs boycotted a meeting chaired by Member of Parliament Rabindranath in Theni district
Author
First Published Nov 10, 2022, 8:13 AM IST

ஆய்வு கூட்டம்- ரவிந்திரநாத் பங்கேற்பு

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில்,மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடந்தது. தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு குழு தலைவரான தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன்,மாவட்ட ஊராட்சித் தலைவர் பிரீத்தா,மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட திட்ட அலுவலர் தண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்களின் பணிகள், அவற்றின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி  செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

2024ல் 39 சீட் குறிச்சு வச்சுக்கோங்க ! எதிர்கட்சிகளை அலறவிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை !

வளர்ச்சி பணிகள் ஆய்வு

மேலும் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு பணிகள், பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டப்பணி, எம்.பி., தொகுதி மேம்பாட்டுத் திட்டப்பணி, பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சாலைப்பணி,தூய்மை பாரத இயக்கம், இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய திட்டம், இந்திரா காந்தி தேசிய ஓய்வூதிய திட்டம்,இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம்,வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான காஸ் இணைப்பு வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் பணி, முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், தேனி மாவட்டத்திலுள்ள 134 கிராம ஊராட்சிகளை சேர்ந்த செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்; மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்... விஜயபாஸ்கர் நம்பிக்கை!!

திமுக எம்எல்ஏக்கள் புறக்கணிப்பு

ஆண்டுதோறும் எம்பி தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், ஆகியோர் கலந்து கொள்வது வழக்கம். கடந்த ஆண்டும் பங்கேற்றனர். சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். அவர்களிடம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் நேரடியாக ஆலோசனை நடத்தி நிதி ஒதுக்கீடு செய்யுமாறும் தங்களுக்கு கிராமங்களுக்கு தேவையான நலத்திட்டங்களை கேட்டுப் பெறுவது வழக்கம்.அந்த வகையில் அந்த வகையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில்  போடி சட்டமன்ற உறுப்பினரான ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மூன்று பேரும் இந்த நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

அதிமுக முன்னாள் எம்எல்ஏக்களை தட்டித்தூக்கிய திமுக.. கெத்து காட்டும் ஸ்டாலின்.. அதிர்ச்சியில் இபிஎஸ், ஓபிஎஸ்.!

Follow Us:
Download App:
  • android
  • ios