Asianet News TamilAsianet News Tamil

சட்டப்பேரவையில் அமளி... இடைக்கால பட்ஜெட்டை புறக்கணித்து திமுக வெளிநடப்பு...!

இந்நிலையில் சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சபாநாயகர் தனபால் அழைப்பு விடுத்தார். 

DMK MLA's walkout from TN budget
Author
Chennai, First Published Feb 23, 2021, 11:45 AM IST

தமிழ்நாடு அரசின் 2021 - 22ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். 15வது சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடர் என்பதாலும், விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதாலும் மக்களை கவரும் விதமான பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

DMK MLA's walkout from TN budget

இந்நிலையில் சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சபாநாயகர் தனபால் அழைப்பு விடுத்தார். அப்போது குறுக்கீட்ட திமுக எம்.எல்.ஏ. துரைமுருகன் உள்ளிட்டோர் எங்களுக்கு முதலில் பேச அனுமதி அளிக்க வேண்டும் என சபாநாயகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

DMK MLA's walkout from TN budget

திமுக எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த சபாநாயகர், இடைக்கால பட்ஜெட்டை வாசிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து அவையில் அமளியில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் இடைக்கால பட்ஜெட்டை புறக்கணித்து பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் புறக்கணிப்பு செய்தனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios