அஜித், ரஜினி இவர்கள் இருவரும் ஜல்லிக்கட்டுக் காளைகள் எனவும் அஜித் 'தல': ரஜினி 'மலை' எனவும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அதிரடியாக பேசி அமர்களப்படுத்தியிருந்தார். இவரை தொடர்ந்து திமுக எம்எல்ஏ ராஜா அஜித்தை பாராட்டி பேசியிருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக அஜித் மீது ஒரு கண் வைத்திருக்கிறது. அதை முறியடிப்பதற்காக கூட திமுக எம்எல்ஏ ராஜா பாராட்டியிருக்கலாம் என்று பேசப்படுகிறது. 

 திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.ராஜா. திமுக மூத்த தலைவரான டி.ஆர்.பாலுவின் மகன்.இவர் நடிகர் அஜித் ரேசிங் விளையாட்டு மீது அதிக ஆர்வம் கொண்டவர். சில ஆண்டுகளுக்கு முன் ரேசிங் குறித்து  பேசிய காணொலியை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அந்த பதிவில் ரேசிங் மீதான வேட்கை, அவரது இதயத்தில் இருப்பதை தெளிவாகக் காண முடிகிறது. அவரை போன்று மற்றவர்களும் தங்களது பிரபலத்தை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள விளையாட்டுகளுக்கு ஆதரவு தர வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அஜித் ரசிகர்கள் பயன்படுத்தும், "தல போல வருமா" 'தல அஜித்' என்ற வாசகங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவு செய்திருப்பது அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.