திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா தற்கொலை முயற்சித்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திமுகவின் முக்கிய பெண் எம்எல்ஏக்களில் ஒருவர் பூங்கோதை ஆலடி அருணா. கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராகவும் பதவி வகித்தவர். இவர் திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியில் இருந்து, 2006ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை தொடர்ந்து 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், ஆலங்குளம் தொகுதியில் இருந்து மீண்டும் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். 

இந்நிலையில், திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா அதிக அளவிலான தூக்க மாத்திரை உட்கொண்டு  தற்கொலை முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர் நெல்லை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது அவரது உடல்நிலை நீராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக திமுக உட்கட்சி பூசல் காரணமாக பூங்கோதை அதிகளவில் தூக்க மாத்திரை உட்கொண்டதாக கூறப்படுகிறது.