கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வந்த திமுக எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளதால் உடன்பிறப்புகள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

சென்னை, சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன்  கடந்த 2ம் தேதியன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து நேற்று வெளியான மருத்துவ அறிக்கையில் அவர் 80% வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அவரது உடல்நலம் குறித்து வருந்தத் தக்க தகவல்கள் உலா வந்தன.

இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி தீவிர சிகிச்சையில் இருக்கும் ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

நேற்று அவர் சுவாசிக்க செயற்கை சுவாசம் 80 % தேவைப்பட்ட நிலையில், இப்போது 67 % போதுமானதாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை அறிந்த திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், 80 சதவீதம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது 60 சதவீதம் மட்டும் செலுத்தப்பட்டால் போதுமானது என்கிற அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று ஜெ.அன்பழகனின் சகோதாரர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.