திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் குரோம்பேட்டையில் உள்ள ஜெகத் ரட்சகனுக்கு சொந்தமான ரேலா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

திமுகவின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும்,  சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களைத் தொடர்ந்து வழங்கி வந்தார். இதனையடுத்து, ஜூன் 3 கலைஞர் பிறந்த தினத்தை ஒட்டி செய்ய வேண்டிய நலத்திட்ட உதவிகளுக்காக மாவட்ட நிர்வாகிகளிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார். 

இந்நிலையில், ஜெ. அன்பழகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, நேற்று இரவு குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் மூச்சுத் திணறலோடு ஜெ.அன்பழகன் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே கல்லீரல் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் அன்பழகன். கொரோனா டெஸ்ட் எடுத்துப் பார்த்ததில் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதனையடுத்து, அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளாகவும் மருத்துவ வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.